ETV Bharat / state

ரவுடியின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.2.5 கோடி.. வலைவீசி தேடும் போலீசார்.. கடலூரில் நடந்தது என்ன? - Cuddalore Rowdy Ashokkumar - CUDDALORE ROWDY ASHOKKUMAR

RS.2.5 Crore Credit Rowdy Account Issue: கடலூர் மாவட்டம், பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியின் வங்கி கணக்கில் ரூ.2.5 கோடி கிரெடிட் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக ரவுடியை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

தலைமறைவான ரவுடி
தலைமறைவான ரவுடி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 14, 2024, 11:36 AM IST

கடலூர்: கடலூர் மாவட்டம், பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளார். அசோக் குமார் மீது கொலை வழக்கு, அடிதடி வழக்கு என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

இவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டி குப்பம் கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளார். இந்த வங்கிக்கு கடந்த ஜூலை மாதம் மட்டும் ரூ.2.5 கோடி பணம் வந்துள்ளது. 10 லட்சம், 20 லட்சம், 50 லட்சம் என ஒரே மாதத்தில் ரூ.2.5 கோடி வந்ததால் வங்கி நிர்வாகத்திற்கு சந்தேகம் ஏற்பட்டது.

இது குறித்து வங்கி நிர்வாகம் அசோக்குமாரிடம் கேட்டபோது தான் பங்கு சந்தையில் முதலீடு செய்திருப்பதாகவும் அதிலிருந்து இந்த தொகை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அதனை சோதனை செய்தபோது பங்கு சந்தை முதலீட்டில் இருந்து வரவில்லை என்பது தெரிய வந்துள்ளது. பின்னர் வங்கி நிர்வாகம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இதனையறிந்த அசோக்குமார் உடனடியாக நண்பர்கள் ஏழு பேர் கணக்கிற்கு ரூ.2 கோடி அளவிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பிவிட்டார்.

வங்கி கணக்கில் ரூ.50 லட்சம் மட்டுமே தற்போது உள்ள நிலையில் வங்கி கணக்கினை போலீசார் முடக்கியுள்ளனர். மேலும் அசோக்குமார் தலைமறைவாகி விட்டதால், அவர் பணம் அனுப்பிய ஏழு பேரிடமும் போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், போலீசாருடன் இணைந்து சைபர் பிரிவு போலீசாரும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். ரவுடியின் வங்கிக் கணக்கிற்கு ரூ.2.5 கோடி வந்தது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: சென்னையில் இருந்து புவனேஸ்வர், பக்டோரா, திருவனந்தபுரத்திற்கு புதிய விமான சேவை - Air India Express

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.