ETV Bharat / state

ஜாமினில் வெளியே வந்த நபர் வீடு புகுந்து வெட்டிக்கொலை.. 48 மணிநேரத்தில் 2 படுகொலையால் திண்டுக்கல்லில் பரபரப்பு - Dindigul rowdy murder - DINDIGUL ROWDY MURDER

Dindigul rowdy murder: திண்டுகல்லில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த ரவுடி வினோத் என்பவரை அடையாளம் தெரியாத கும்பல் வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி வினோத் வெட்டிக் கொலை
ரவுடி வினோத் வெட்டிக் கொலை (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 11:58 AM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் இருந்து மொட்டணம்பட்டி செல்லும் சாலையில் உள்ள டிவைன் நகரைச் சேர்ந்தவர் ரவுடி வினோத். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், மூன்று குழந்தைகள் உள்ளனர். முன்னதாக வினோத், ரவுடி சுள்ளான் என்பவரை 2020ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து திண்டுக்கல்லில் வசித்தால் எதிரிகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எண்ணி, திருப்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை திருப்பூர் அழைத்துச் செல்வதற்காக திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு தனது வீட்டில் தாய், அக்காவுடன் அமர்ந்து உணவு அருந்தி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் திடீரென வீட்டிற்குள் புகுந்து தாய் கண்முன்னே வினோத்தை வெட்டி படுகொலை செய்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீசார், வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து கொலை நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நேற்றைய முன்தினம் வேடப்பட்டி பகுதியில் கூலித்தொழிலாளி பாண்டி என்பவர் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பெரும் அச்சத்தில் இருந்த பொதுமக்கள், தற்போது 48 மணி நேரத்தில் மேட்டுப்பட்டி பகுதியில் வினோத்குமார் என்பவர் வீடு புகுந்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: குடிபோதையில் நடுரோட்டில் பைக்கில் உறக்கம்.. தள்ளிவிட்டு வாகனத்தை திருடிய மர்ம நபர்! - Palani Bike Theft

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.