ETV Bharat / state

செங்கல்பட்டு அருகே பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்! - rowdy sirkazhi sathya

Rowdy Sirkali Sathya arrested: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்ற பிரபல ரவுடி சீர்காழி சத்யா என்பவரை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரவுடி சீர்காழி சத்யா
ரவுடி சீர்காழி சத்யா (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 28, 2024, 4:11 PM IST

செங்கல்பட்டு: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்ற சீர்காழி சத்யா (41). இவர் மீது கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியான சீர்காழி சத்யா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பல்லாவரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக காரில் வந்துள்ளார். அப்போது, வட நெம்மேலி செக் போஸ்ட்டில் உதவி ஆய்வாளர் ரஞ்சித் குமார் தலைமையிலான போலீசார் சத்யாவின் காரை மடக்கி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது, சத்யா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு அருகே பழவேரி பகுதியில் உள்ள மலையில் தனது கூட்டாளிகள் இருப்பதாக கூறியதன் அடிப்படையில், போலீசார் சத்யாவை அழைத்துக் கொண்டு பழவேரி மலைக்கு வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைத் தாக்கி விட்டு சீர்காழி சத்யா தப்பியோட முயற்சித்துள்ளார். இதனால் போலீசார் சத்யாவை துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டதில், இடது காலில் குண்டு பாய்ந்து ரத்தம் வெளியேறியுள்ளது. காயமடைந்த அவரால் தப்பிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து, அவரை மீட்ட போலீசார் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், சீர்காழி சத்யா தாக்கியதில் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் ரஞ்சித்துக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கொலை வழக்கில் விடுதலையான திமுக முன்னாள் எம்எல்ஏ; மேல்முறையீட்டுக்கு பதிலளிக்க சிபிஐக்கு உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.