ETV Bharat / state

“ரெண்டு புரோட்டா ஒரு ஆம்லேட்..” ஹோட்டலை சூறையாடிய ரவுடி.. தூத்துக்குடியில் நடந்தது என்ன? - Rowdy arrested at thoothukudi - ROWDY ARRESTED AT THOOTHUKUDI

Rowdy threatened to kill the hotel owner: தூத்துக்குடியில் ஹோட்டல் ஒன்றில் உணவு சாப்பிட்ட பின், பணம் கொடுக்காமல் ஹோட்டலை சூறையாடி, உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவு அரிவாளுடன் இருக்கும் புகைப்படம்
ரவு அரிவாளுடன் இருக்கும் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 5:02 PM IST

Updated : May 11, 2024, 5:29 PM IST

அரிவாளுடன் வந்த ரவுடி வீடியோ (Credits to ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: சாப்பிட்ட உணவிற்கு பணம் கொடுக்காமல் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா, டேபிள், சேர் உள்ளிட்ட அனைத்தையும் அடித்து நொறுக்கியதோடு, அரிவாளுடன் ஹோட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அரிவாளுடன் சாலையில் அட்டகாசம் செய்த அந்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (45). இவர் கோவில்பட்டி - கடலையூர் நெடுஞ்சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே ஒத்தக்கடை என்ற பெயரில் ஹோட்டல் ஒன்றை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி மதன்குமார் என்பவர் அடிக்கடி வந்து சாப்பிட்டுச் சென்றுள்ளார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹோட்டலுக்கு வந்து 700 ரூபாய்க்கு சாப்பிட்டு விட்டு பணம் தராமல் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று மாலை ரவுடி மதன்குமார் கஞ்சா போதையில் மீண்டும் ஒத்தக்கடை ஹோட்டலுக்குச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த ஹோட்டல் பணியாளர்களிடம், சொடக்கு போட்டு இரண்டு புரோட்டாவும், ஒரு ஆம்லேட்டும் பார்சல் கேட்டுள்ளார்.

அப்போது கடை உரிமையாளர், பழைய பாக்கியான 700 ரூபாயைக் கொடுத்தால் மட்டுமே புரோட்டா தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரவுடி, கடை உரிமையாளரிடம் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்து சென்ற அவர், சற்று நேரத்திலேயே திரும்பி வந்து சட்டைக்குப் பின்னால் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து, ஓட்டலில் இருந்த 6 சிசிடிவி கேமராக்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி, கேமரா ஹார்ட் டிஸ்க் கேபிள் வயர்களை அறுத்து எரிந்துள்ளார்.

தொடர்ந்து, அங்கிருந்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை எல்லாம் அடித்து உடைத்து கடையை சூறையாடியுள்ளார். பின்னர் தலைக்கு மேலே அரிவாளை சுற்றிக்கொண்டு, ‘நான் எப்ப வந்தாலும் புரோட்டா கொடுக்கணும்.. இல்லைனா நான் உன் தலையை வெட்டி ரோட்டில் வீசிடுவேன்’ எனக் கூறி, ஓட்டல் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், அவ்வழியாக சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிவாளுடன் அட்டகாசம் செய்து வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகாதேவி, எஸ்.ஐ.நிர்மலா தலைமையிலான போலீசார், அரிவாளுடன் நின்று கொண்டிருந்த ரவுடி மதன்குமாரைச் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதையடுத்து, ஹோட்டல் உரிமையாளர் அருணாசலம் கொடுத்த புகாரின் பேரில், ரவுடி மதன்குமார் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவுடி மதன்குமாரை கைது செய்தனர். இந்நிலையில், ரவுடி அரிவாளுடன் ஹோட்டலுக்குள் புகுந்து சிசிடிவி கேமராக்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கொலை முயற்சி வழக்கில் பாஜக மாவட்டத் தலைவர் கைது.. 9 பேரை தேடும் போலீசார்! - Tiruvarur Bjp Leader Arrest

Last Updated : May 11, 2024, 5:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.