ETV Bharat / state

பீர் பாட்டிலை வீசி மாணவர்கள் மோதல்.. ரணகளமான பட்டரவாக்கம் ரயில் நிலையம்- 60 பேர் மீது வழக்குப்பதிவு!

Chennai Collage student clash: சென்னை கடற்கரையிலிருந்து அரக்கோணம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

collage student clash
கல்லூரி மாணவர்கள் மோதல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 4:05 PM IST

திருவள்ளூர்: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் உள்ள மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது. இவர்களில் சில மாணவர்கள் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களில் கோஷ்டிகளாக மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ‘ரூட்டு தல’ என கூறப்படுகிறது.

இதனையடுத்து, மோதலில் ஈடுபடும் மாணவர்களை போலீசார் கைது செய்தாலும், அவர்களின் எதிர்காலம் கருதி எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம் நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்துள்ளது. அதில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாநிலக் கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவர்கள் பயணம் செய்துள்ளனர்.

மின்சார ரயிலானது பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது, அங்கு ஏற்கனவே கற்கள், பீர் பாட்டில்களுடன் காத்திருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். இதையடுத்து மாநிலக் கல்லூரி மாணவர்களும் பதிலுக்குத் தாக்கத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் ரயில் மற்றும் நடைமேடையில் நின்று கொண்டிருந்த பயணிகள் பீதி அடைந்தனர். இதில் சில மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். போலீசார் வருவதைக் கண்டதும் மாணவர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக, பெரம்பூர் ரயில்வே போலீசார் பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரிகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், மோதலில் ஈடுபட்ட மாநில கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்களை இன்று கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதமுள்ள மாணவர்களை வீடியோ காட்சிகள் அடிப்படையில் அடையாளம் கண்டு, அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். மேலும், மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை, கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்க வேண்டும் என ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு கடிதம் வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றம்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.