ETV Bharat / state

5 ஆண்டுகளாக சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்த செவிலியர் மதுரையில் கைது! - சட்டவிரோத கருக்கலைப்பு

Madurai Fetal murder: மதுரையில் கடந்த 5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கருக்கொலை செய்து வந்த ஓய்வு பெற்ற அரசு செவிலியர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத கருகலைப்பில் ஈடுபட்ட அரசு செவிலியர் கைது

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 10:57 AM IST

மதுரை: சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு இரு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிய, மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியைச் சார்ந்த விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் காந்திமதி என்பவரை அணுகி உள்ளார்.

அதன் பின்னர் காந்திமதி, காயத்ரியை சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சட்டவிரோதமாக குழந்தையின் பாலின அறிதல் பரிசோதனை செய்துள்ளனர். அப்போது, காயத்ரி மூன்றாவது முறையும் பெண் குழந்தை கருவுற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து காயத்ரியிடம் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு, காந்திமதி தனது வீட்டிலேயே காயத்திரிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட காயத்ரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்போது மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கருக்கலைப்பு செய்தது தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் தான் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் காந்திமதியின் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: மருமகனைக் கொல்ல முயன்ற மாமனார்.. கொலை முயற்சியில் பலியான 15 வயது சிறுமி - ஈரோட்டில் நடந்த கொடூரம்!

அப்போது, கடந்த 2019ஆம் ஆண்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்த காந்திமதி விருப்ப ஓய்வு பெற்று, கடந்த ஐந்து ஆண்டுகளாக இதேபோல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிதல், கருக்கலைப்பு செய்ய விரும்பும் கர்ப்பிணிகளுக்கு சட்டவிரோத கருக்கலைப்பு செய்து வந்துள்ளார்.

மேலும், காந்திமதிக்கு உதவியதாக சோழவந்தான் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் உரிமையாளர் விஜயலட்சுமி என்பவர் மீதும் சுகாதாரத்துறையினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, அலங்காநல்லூர் போலீசார் காந்திமதியை கைது செய்தனர்.

மேலும், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பெண் சிசுக்களை கருவிலேயே கொலை செய்து வந்த ஓய்வு பெற்ற அரசு செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டு வயது மகளைக் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட தாய்.. மதுரையில் நடந்த சோகச் சம்பவம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.