ETV Bharat / state

நீலகிரியில் வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர்.. நீர்த்தேக்க தொட்டிகளில் சேமிக்க அரசுக்குக் கோரிக்கை! - Nilgiris water issue - NILGIRIS WATER ISSUE

Nilgiris Water Issue: நீலகிரியில் நாள்தோறும் வீணாகும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீரை நீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து, வரும் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Nilgiris
நீலகிரி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 6, 2024, 3:48 PM IST

நீலகிரி

நீலகிரி: ஊட்டி, குன்னூர், கோத்தகிரி நீர் நிலைகளிலிருந்து குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்லும் ராட்சத குடிநீர் குழாய்களில், பல இடங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வழிந்தோடும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இந்த குழாய்களில் தற்போது உடைப்புகள் ஏற்பட்டு, குடிநீர் வெள்ளம் போல் சாலையில் வழிந்து ஓடுகிறது. மேலும், குடிநீர் தேக்கத் தொட்டிகளில் நீர் நிரம்பி வழிந்து வீணாகிறது. இதனால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிறது.

இந்நிலையில், கோடைக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குன்னூர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள ரேலியா அணை, தற்போது கோடைக் காலம் என்பதால் நீர்வரத்து குறைந்து 30 அடியாக உள்ளது. மேலும், 43.7 அடி உயரம் கொண்ட இந்த அணையின் நீர்மட்டமானது, வேகமாகக் குறைந்து வருகிறது.

ஆகையால், இந்த கோடைக் காலத்தில் நீலகிரி நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, கோடைக் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதால், உடனடியாக குழாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்பைச் சரிசெய்யுமாறும், நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீரைச் சேமித்து, வரும் கோடைக் காலத்தில் பொது மக்களுக்கு முறையாக வழங்க வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன் கூறுகையில், "இயற்கையின் குடையாக உள்ள நீர் தற்போது விலை போகின்ற பொருளாக மாறி இருப்பது, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. இதற்கான காரணம் குறித்து, 1992ஆம் ஆண்டு 'ரியோ டி ஜெனிரா'-வில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் மாநாட்டிலே ஆய்வு செய்யப்பட்டது.

அதில், இனி வரும் காலங்களில் குடிநீர் என்பதும், தண்ணீர் என்பதும் மக்களுக்குக் கிடைக்காத அறியப் பொருளாக மாறிவிடும் என்பதும், அதுபோன்ற போக்கை நோக்கியே சென்று கொண்டிருப்பதையும் உணர்ந்த அந்த மாநாடு, குடிநீரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, மார்ச் 22ஆம் தேதியைத் தண்ணீர் தினமாக அனுசரிக்க வேண்டும் என்று முடிவு செய்து, மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தான், 1993ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 22ஆம் தேதி தண்ணீர் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், இன்றைய சூழலில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தை தண்ணீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும், உலகத்தில் உள்ள 800 கோடி மக்களில், 570 கோடி மக்கள் ஆண்டில் ஒரு மாதத்திலாவது, குடிநீரின்றி தவிப்பார்கள் என மற்றொரு புள்ளி விவரம் சொல்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால், 2050ஆம் ஆண்டு இந்த உலகில் உள்ள பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஒரு சொட்டு குடிநீர் கூட கிடைக்காது. இதற்கான காரணங்களை ஆராய்ந்தால், காடுகள் அழிக்கப்படுவதும், ஆடம்பர பொருட்கள் தயாரிக்கத் தண்ணீர் பயன்படுத்தப்படுவதுமே முக்கிய காரணமாக உள்ளது. ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 2 ஆயிரத்து 500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதே போன்று கார் தயாரிக்க 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வேண்டுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஆகவே, ஆடம்பர பொருட்கள் தயாரிக்க, குடிநீர் அதிகம் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் தென்னகத்தின் நீர்த்தேக்க தொட்டி என்று போற்றப்படுவது, நீலகிரி மாவட்டம். இம்மாவட்டத்தில் இருந்து பல இடங்களுக்கு ஆற்று நீர் செல்கிறது. காவிரி ஆற்றின் ஒரு பங்கு நீர், நீலகிரி மாவட்டத்திலிருந்து செல்கிறது என்பது தான் எதார்த்தமான உண்மை. ஆனால், இங்குள்ள நீர் நிலைகளோ பாதுகாப்பின்றி உள்ளன. எனவே, அரசு இந்த நீர் நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஏஐ மூலம் மக்களவை தேர்தலை சீர்குலைக்க சீனா, வடகொரியா திட்டம்" - மைக்ரோசாப்ட் எச்சரிக்கை! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.