ETV Bharat / state

விஜயகாந்த் நினைவாக 'காணாம தேடுகிறோம்' என்ற பாடல் வெளியீடு!

Kannamal Thetukirom song: விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வைத்து 'காணாம தேடுறோம்' என்ற விஜயகாந்த் குறித்த நினைவு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

vijayakanth
vijayakanth
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 10:50 PM IST

சென்னை: முன்னாள் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் சமீபத்தில் மறைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், விஜயகாந்த்தை நினைவாகக் கொண்டு தயாரிப்பாளர் குணாஜீ இயக்கிய 'காணாம தேடுகிறோம்' என்ற விஜயகாந்த் நினைவு பாடல் அவரது நினைவிடத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டார்.

இந்த பாடலுக்கு கெவின் டிகோஸ்டா இசையமைத்துள்ளார். இசைப் பிரியன் வரிகளை அமைத்துள்ளார். ஜாக் அருணாசலம் இந்த பாடலை தயாரித்துள்ளார். இந்த நிகழ்வில் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் மற்றும் பார்த்தசாரதி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரன் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பெயரையும், திரைப்படம் வெளியாகும் தேதியையும் விஜயகாந்த் நினைவிடத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படத்தின் பெயர் அக்கரன். அக்கரன் என்பது பொருள் கடவுள் என்று அர்த்தம். இந்த திரைப்படம் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது, "தேமுதிக தலைவர் மறைந்து 48 நாட்கள் கடந்துள்ளது. தினந்தோறும் விஜயகாந்த் நினைவிடத்தில் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதே போல் இன்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

48வது நாள் என்பது ஒரு முக்கியமான நாள். 48 நாட்களை ஒரு மண்டலம் என்பது கூறுவார்கள். விண்ணுலகத்திலிருந்து விஜயகாந்த் அனைவரையும் ஆசீர்வாதம் செய்து வருகிறார். நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அவருடைய திரைப்படத்தின் பெயர் மற்றும் திரைப்பட வெளியீடு தேதி குறித்து அவருடைய நினைவிடத்தில் வெளியிட வேண்டும் என ஆசைப்பட்டனர்" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் கூறுகையில், "நடிகர் சங்க அடையாள அட்டை வாங்கி கொடுத்து அண்ணன் விஜயகாந்த் தான். அந்த அடையாளத்தை வைத்துத் தான் இன்னும் நடிப்புத் துறையில் இருந்து வருகிறேன். என்னுடைய படத்தின் பெயரை அவர் நினைவிடத்தில் வெளியிடுவது நன்றி கடன் செலுத்துவது என்று ஒரு சாதாரண வார்த்தையால் மட்டும் சொல்ல முடியாது.

என்னுடைய இதயத்தை அவருடைய காலில் வைப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. இந்த திரைப்படத்தின் பெயர் மற்றும் வெளியீடு தேதி விஜயகாந்த்தின் நினைவிடத்தில் வைத்துத் தான் அறிவிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளரும், நானும் ஆசைப்பட்டோம். இந்த இடத்தில் விஜயகாந்த் ஒரு இறைவனாகக் காணப்பட்டு வருகிறார். அவருடைய ஆசீர்வாதத்துடன் நாம் பெரிய பெரிய வெற்றிகளை அடைவோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.