ETV Bharat / state

நெல்லை தேர் திருவிழாவில் வடம் அறுந்தது அபசகுணமா? அலட்சியமா? - பக்தர்கள் கூறுவது என்ன? - NELLAIAPPAR CAR FESTIVAL - NELLAIAPPAR CAR FESTIVAL

NELLAIAPPAR THER THIRUVIZHA: நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், தேரோட்டத்தின்போது வடம் அறுந்து விழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுவரை இந்த மாதிரியான சம்பவம் நடைபெறாத நிலையில், தற்போது நடைபெற்றதற்கான காரணம் அபசகுணமா? அதிகாரிகளின் அலட்சியமா? பக்தர்கள் கூறுவதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்..

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் (CREDIT - ETV Bharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 22, 2024, 4:30 PM IST

திருநெல்வேலி: நெல்லை டவுனில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் நேற்று (ஜூன் 21) ஆனித் தேரோட்டம் நடைபெற்றது. அந்த வகையில், காலை 6:30 மணி முதல் 7.30 மணிக்குள் தேர் திருவிழா தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை எம்பி ராபர்ட் ப்ரூஸ் உள்பட சிறப்பு விருந்தினர்கள் 7.18 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேர்த் திருவிழாவை தொடங்கி வைத்த நிலையில் தேரில் கட்டப்பட்டிருந்த மூன்று ராட்சத வடம் அறுந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் (Video Credits - ETV Bharat Tamilnadu)

மீண்டும் மீண்டும் அறுந்து விழுந்த வடம்: இதனால் தேர் இழுப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், உடனடியாக மாற்று வடம் கொண்டுவரப்பட்டு தேரில் கட்டப்பட்டது. அதை தொடர்ந்து சுமார் 40 நிமிடம் தாமதமாக தேர் திருவிழா தொடங்கிய நிலையில் மீண்டும் ஒரு சில வினாடிகளில் வடம் அறுந்தது. பின்னர் மீண்டும் மாற்று வடம் கட்டப்பட்டு தேர் இழுக்கப்பட்ட நிலையில் சுமார் 500 மீட்டர் தொலைவில் வரும்போது மூன்றாவது முறையாக தேரின் வடம் அறுந்தது.

இதையடுத்து இரும்பு சங்கிலி கொண்டு தேரை இழுக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதன்படி இரும்பு சங்கிலி கொண்டுவரப்பட்டு இரண்டு வடத்துக்கு நடுவில் கட்டப்பட்டது. அதேசமயம் இதுவரை நடைபெற்ற 517 தேர்த் திருவிழாவில் ஒருமுறை கூட தேரின் வடம் அறுந்தது இல்லை என கூறப்படுகிறது.

மேலும், இதுவரை ஒரு முறை கூட தேரை இழுக்க இரும்புச் சங்கிலி பயன்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இம்முறை இரும்பு சங்கிலி பயன்படுத்தியது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும் வேறு வழி இல்லாமல் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தேரை இழுக்க தொடங்கினர். அதே சமயம் சிறிது தூரம் போன நிலையில் நான்காவது முறையாக வடம் அறுந்தது.

அபசகுணமா?: பின்னர், சுமார் அரை மணி நேரம் தாமதத்திற்கு பிறகு தேர் இழுக்கப்பட்டு டவுன் வாகையடி மூக்கில் செல்லும்போது மீண்டும் ஐந்தாவது முறையாக வடம் அறுந்தது. இது போன்ற அடுத்தடுத்து ஐந்து முறை திருத்தேர் வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஏற்கனவே தேர் இழுக்க தொடங்கிய சில வினாடிகளிலையே வடம் அறுந்ததால் பக்தர்கள் அதை அபசகுணமாக கருதினர்.

அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?: குறிப்பாக 517 ஆண்டுகளில் இல்லாத வகையில் இதுபோன்ற வடம் அறுந்ததால் இந்து அறநிலைத்துறையின் அலட்சியமே இதற்கு காரணம் எனக்கூறி இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அடுத்தடுத்து ஐந்து முறை வடம் அறுந்து விழுந்ததற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அதேசமயம், "சிவனடியார்கள் கூறும்போது தீயவினைகள் அறுக்கப்பட்டதாகவும் இதனால் கவலையில்லை; இது இயற்கையாக நடப்பது தான்" என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: சாமானியரின் பைக் சாவியை பிடுங்கிச் சென்ற கடற்படை வாகன ஓட்டுநர்! வைரலாகும் வீடியோ - Navy VAN DRIVER Issue VIDEO

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.