ETV Bharat / state

ஏசி சண்முகம் தொடர்ந்த வழக்கு.. வேலூரில் 2வது நாளாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மறு பரிசோதனை! - A C Shanmugam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2024, 9:09 AM IST

Vellore Lok Sabha Constituency: மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வேலை செய்யவில்லை ஏ.சி சண்முகம் தொடர்ந்த வழக்கில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 2வது நாளாக வாக்குப்பதிவு எந்திரங்கள் மறு பரிசோதனை செய்யப்பட்டது.

வேலூர் வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு
வேலூர் வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கு (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் 5 லட்சத்து 68 ஆயிரத்து 692 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்தபடியாக பாஜக சார்பில் போட்டியில் ஏ.சி சண்முகம் 3 லட்சத்து 52 ஆயிரத்து 990 வாக்குகள் பெற்றிருந்தார்.

அதாவது, மொத்தம் பதிவான வாக்குகளில் 31.25 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார் ஏ.சி சண்முகம். இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக வேலை செய்யவில்லை எனவும், வேலூர் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த பிரச்சனை உள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "6 தொகுதிகளுக்கு ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தைப் பரிசோதனை செய்ய வேண்டும். அந்த ஒரு இயந்திரத்தை ஏ.சி சண்முகம் தரப்பை சேர்ந்தவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். பரிசோதனை செய்யும் போது அதில் பதிவான வாக்குகளை அழித்துவிட்டு சோதனை செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், திமுக மற்றும் பாஜக முகவர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் பரிசோதனை தொடங்கியது. முதலில் அணைக்கட்டு தொகுதியில் நடைபெற்ற பரிசோதனையில் பாஜக முகவர்களே ஒரு நாள் முழுவதும் மாறி மாறி ஏ,பி,சி,டி என்ற அடிப்படையில் வாக்குகளை செலுத்தினர்.

இதில், வேலூர் சட்டமன்ற தொகுதியில் அவர்கள் செலுத்திய வாக்குகள் சரியாக இருந்தது. இதனையடுத்து இன்றும், நாளையும் இந்தப் பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது தேர்தல் ஆணைய அதிகாரிகள், சம்பந்தப்பட்ட முகவர்கள், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: பேச்சுவார்த்தை தாமதம்; "இடைக்கால நிவாரணமாக ரூ.3600 வழங்க வேண்டும்" - தொழிற்சங்கங்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.