ETV Bharat / state

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: பாம்பன் ரயிலை மறிப்போம் என சங்கம் எச்சரிக்கை.. மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்! - FISHERMEN PROTEST

இலங்கைக் கடற்படையால் 23 மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாம்பனில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 1:13 PM IST

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கும் மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசு கண்டித்தும், ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காவல்துறைக்கும், மீனவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நவம்பர் 10ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களை நெடுந்தீவு அருகே இரண்டு விசைப்படகுகளையும், அதில் இருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி சிறை பிடித்தது. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் தற்போது இலங்கை சிறையில் உறவினர்களை அணுக முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், சிறைபிடிக்கப்பட்ட படகையும் மீனவர்களையும் விடுவிக்கும்படி, இலங்கை கடற்படையை கண்டித்தும், நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசைக் கண்டித்தும் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் இன்று பாம்பன் பேருந்து நிலையத்தின் அருகே பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் பெண்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டத்தில் பெண்கள் (ETV Bharat Tamil Nadu)

பாம்பன் புதிய பாலத்தில் 80 கி.மீ வேகத்தில் சீறிப்பாய்ந்த ரயில்! - போக்குவரத்து தொடக்கம் எப்போது?

தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பணிகளும், பொதுமக்களும் சிரமத்துக்குள்ளாகினர்.

மேலும், மீனவர்களை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாம்பன் புதிய ரயில் பாலத்தில், ரயில் போக்குவரத்து தொடங்கும் அன்று ரயில் மறியலில் ஈடுபட போவதாக மீனவ சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்: இந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (12-11-2024) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 'இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்க விரும்புவதாகவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைப்பதோடு, அவர்களது குடும்பங்களுக்கு பெருத்த துயரத்தை ஏற்படுத்துவதாகக் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

09.11.2024 அன்று, இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் IND-TN-10-MM-958 மற்றும் IND-TN-10-MM-641 ஆகிய பதிவெண்களைக் கொண்ட 2 இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 12.11.2024 அன்று, நாகப்பட்டினத்திலிருந்து பதிவெண் IND-TN-06-MM- 8478 என்ற மீன்பிடிப் படகில் மீன்பிடிக்கச் சென்றிருந்த 12 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2024-ம் ஆண்டில் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் முதல்வர் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று தொடர்ந்து கைது செய்யப்படுவதைத் தடுக்கவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக தூதரக நடவடிக்கைகள் மூலம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

11 மீனவர்களுக்கு சிறை: இதனிடையே, இலங்கை கடற்படையால் அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் தொடர்பான வழக்கு ஊர்காவல் துறை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, '11 மீனவர்கள் இரண்டாவது முறையாக சிறை பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் 4 மீனவர்களுக்கு நிபந்தனையுடன் விடுதலை செய்யப்படுகிறார்கள்' என்று நீதிபதி தமது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.