ETV Bharat / state

தென்காசி மக்களின் 60 ஆண்டு கால கனவு.. பூமி பூஜை தொடங்கியது ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டம்! - ஜம்பு நதி

ramanadi jambu river:ராமநதி- ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டம் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

ramanadi-jambu-river-link-canal-project-started-with-puja
ராமநதி- ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டம் பூமி பூஜை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 30, 2024, 9:23 PM IST

ராமநதி- ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டம் பூமி பூஜை

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 1962 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் ராமநதி, கடனா நதி அணை மற்றும் ஜம்மு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை 1974 ஆம் ஆண்டு இந்த அணைகளை தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

ஆனால் ஜம்ப நதி கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த ஜம்புநதி கால்வாய் திட்டம் என்பது ராமநதி அணையின் உபரிநீரை ஜம்பு நதியில் அமைந்துள்ள குத்தாலபேரி, நாராயணபேரி அணைக்கட்டுகளுக்குக் கொண்டு வருவது ராமநதி- ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் ரூபாய் 42 கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். பின்னர் 40-லட்சம் ஆய்வு பணிக்கும் ரூ5-கோடி நிலம் கையகப்படுத்தவும் ஒதுக்கப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இத்திட்டம் தாமதப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் கால்வாய் வெட்டும் பணிக்கு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் பூமி பூஜையுடன் பணிகள் தொடங்கப்பட்டது. அந்த சமயம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டல பாதுகாப்பு பகுதியில் இந்த கால்வாய் செல்வதால் வனத்துறையின் தடையில்லா சான்று பெற்றுத் திட்டத்தைத் தொடருமாறு வனத்துறையினர் இத்திட்டப் பணிகளை நிறுத்திவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து தற்போது மாநில வன உயிரின நல வாரிய குழு மாற்றி அமைக்கப்பட்டு அக்குழு மத்திய வனத்துறைக்கு மத்திய பரிந்துரைத்தது. இதனை கடந்த நவம்பர் மாதம் மத்திய வனத்துறை அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில் இன்று ராமநதி ஜம்பு நதி இணைப்பு கால்வாய் திட்டம் பணிகள் நடைபெறுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் திருநெல்வேலிகண்காணிப்பு பொறியாளர் கோபாலகிருஷ்ணன், ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் செயல்பாட்டுக் குழு அமைப்பாளர் உதயசூரியன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் 25 குளங்கள் நிரம்பி , 4 ஆயிரத்து 50 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. 729 கிணறுகள் செறிவூட்டப்படுகின்றன. கடையம் கீழப்பாவூர் ஒன்றியங்களில் பல நூறு கிராமங்கள் இதனால் பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குரூப்-4 தேர்வு தேதியை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி: 6,244 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.