ETV Bharat / state

தாயின் முன் பதவிப்பிரமாணம்! நெல்லை மேயராக பதவியேற்றார் ராமகிருஷ்ணன்! - NELLAI MAYOR RAMAKRISHNAN - NELLAI MAYOR RAMAKRISHNAN

NELLAI MAYOR RAMAKRISHNAN: திருநெல்வேலி மாநகராட்சியின் ஏழாவது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தனது 95 வயது தாயின் முன் பதவியேற்றுக் கொண்டார்.

புதிய மேயராக பதவியேற்று கொண்ட ராமகிருஷ்ணன்
புதிய மேயராக பதவியேற்று கொண்ட ராமகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 1:09 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தலில் திமுக வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்ற நிலையில், நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மற்றும் அவரது தாய் முன்னிலையில் புதிய மேயராக பொறுப்பேற்று கொண்டார்.

நெல்லை மேயர் பதவியேற்பு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆளுங்கட்சியான திமுக சார்பில் கிட்டு(எ) ராமகிருஷ்ணன் போட்டியிட்டார்.

கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் என்பதால் ராமகிருஷ்ணனை எதிர்த்து யாரும் போட்டியிட மாட்டார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரை எதிர்த்து அதே திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் போட்டியிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

ஏற்கனவே கவுன்சிலர் பவுல்ராஜை திமுக தலைமை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே பரபரப்பான சூழலுக்கு நடுவே நடைபெற்ற மேயர் தேர்தலில், திமுக தலைமையை எதிர்த்து போட்டியிட்ட பவுல்ராஜ் 23 வாக்குகள் பெற்றிருந்தார். மொத்தம் 55 கவுன்சிலர்களில் 54 பேர் மட்டுமே தேர்தலில் பங்கேற்ற நிலையில் 30 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

ஏற்கனவே மேயராக இருந்த சரவணனுக்கு கடும் எதிர்ப்புகள் இருந்த காரணத்தால் தான் அவரை திமுக தலைமை ராஜினாமா செய்யும்படி கூறியது. இது போன்ற நிலையில் மீண்டும் கட்சி தலைமையால் தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணனுக்கு 23 கவுன்சிலர்கள் எதிராக வாக்களித்த சம்பவம் திமுக தலைமையை அதிரச் செய்தது. இந்த சூழ்நிலையில் இன்று புதிய மேயர் பதவியேற்பு விழா நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

அதன்படி, புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராமகிருஷ்ணனுக்கு மாநகராட்சி அலுவலக வாசலில் திமுக சார்பில் பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நெல்லை மாநகராட்சியின் ஏழாவது மேயராக ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, எனது தாய் மரகதம்மாள் வழிகாட்டுதலோடு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் தலைமையில் இந்த மாநகராட்சியை சிறந்த மாநகராட்சியாக மாற்ற பாடுபடுவேன் என உறுதி கூறினார். மாநகராட்சி ஆணையர் சுக புத்ரா மேயருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்து அங்கியை வழங்கினார். அதனை தனது 95 வயதான தாய் மரகதம்மாள் கையால் அங்கியை பெற்று அணிந்து கொண்டார். பின்னர் ஆணையர் சுகபுத்ரா மேயருக்கு செங்கோலை வழங்கினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: விபத்தில்லா சென்னை.. "ஜீரோ ஆக்சிடெண்ட் டே"- போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கூறுவது என்ன? - Zero Accident Day

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.