விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கத்தில் இன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மதுரை ரயில்வே கோட்ட கலந்தாய்வுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம்சங்கர் கலந்து கொண்டார்.
ராஜபாளையம் ரயில் பயணிகளின் தேவைகள்: இந்த கூட்டத்தில் ராஜபாளையம் ரயில் பயணிகளுக்கான தேவைகளாக, ராஜபாளையத்தில் இருந்து மதுரை, நெல்லை, கொல்லத்திற்கு மெமு வகை புறநகர் ரயில்களை இயக்க வேண்டும். சோழபுரம் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும். விருதுநகருக்கும், செங்கோட்டைக்கும் இடையே இருக்கும் ரயில் வழித்தடத்தை இரட்டைப் பாதையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ரயில் சேவை வேண்டும்: மேலும், கோவை, திருப்பூர் மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு தினசரி இரவு நேர ரயில் ஒன்றாவது இயக்கப்பட வேண்டும். மேலும், சிலம்பு விரைவு ரயில் தினசரி இயக்க வேண்டும். செங்கோட்டைக்கும், மயிலாடுதுறைக்கும் இடையே விடப்படும் விரைவு ரயிலில் முன்பதிவற்ற பெட்டிகளோடு அதிகபட்சமாக 20 பெட்டிகளாவது கொண்டு இயக்கப்பட வேண்டும் என தெற்கு ரயில்வே தலைமைக்கு ராஜபாளையம் ரயில் பயனாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளனர்
இதையும் படிங்க: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் திமுக சார்பில் பங்கேற்கும் டி.ஆர்.பாலு!