ETV Bharat / state

தொடரும் அரசியல் கட்சியினரின் வாகன அட்ராசிட்டி…கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாட்டில் கட்சியினர் அலப்பறை! - puthiya dravida kazhagam

Puthiya Dravida Kazhagam: ஈரோட்டில் நடைபெற்ற கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாட்டில், அக்கட்சியினர் அபயகரமான முறையில் மைதானத்தில் புழுதி பறக்க வாகனத்தை இயக்கி அலப்பறையில் ஈடுபட்டனர்.

கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாடு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 19, 2024, 5:11 PM IST

கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் சமூக நீதி மாநாடு

ஈரோடு: புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் 5வது கொங்கு நாட்டின் சமூக நீதி மாநில மாநாடு பெருந்துறை விஜயமங்கலம் சோதனை சாவடி அருகே நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, மதிவேந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பங்கேற்ற அக்கட்சியினர் மற்றும் கூட்டணி அமைப்பினர் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் வாகனத்தை இயக்கி அச்சத்தை ஏற்படுத்தினர். பெருந்துறை காவல் நிலைய ஆய்வாளர் வாகனம் முன்பாகவே காரில் அமர்ந்த படி மைதானத்தைச் சுற்றி மணல் புழுதி பறக்க காரில் வட்டமடித்து அலப்பறையில் ஈடுபட்டனர்.

மேலும் கட்சியின் கொடியை டிராக்டர் வாகனத்தில் கட்டியபடி டிராக்டர் வாகனத்தை பின் புறமாகவும், முன் புறமாகவும் இயக்கி சாகசத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா, திருப்பூர் குமரன் பிறந்த நாள் விழா, அரசியல் கட்சியினரின் மாநாடு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மோட்டார் வாகன விதிகளுக்குப் புறம்பாக இரண்டு சக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் மூன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

இதே போலக் கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர்கள் மாநாட்டிலும், இக்கட்சியைச் சேர்ந்தவர்கள் பலர் காரில் அமர்ந்தபடியும் இரண்டு சக்கர வாகனத்திலும் டிராக்டர் வாகனத்திலும் சாகசம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபோன்ற தொடரும் அரசியல் கட்சியினரின் வாகன அட்ராசிட்டிகளை தமிழக அரசும் நீதிமன்றமும் தலையிட்டு பெரிய அளவில் உயிர் இழப்புகள் ஏற்படுவதற்கு முன்பாக கட்டுப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழில் செயற்கை நுண்ணறிவு - ஆராய்ச்சி நிறுவனங்களுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.