ETV Bharat / state

“காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா?” - யூகலிப்டஸ் வளர்ப்பு வழக்கில் நீதிமன்றம் வருத்தம்! - Pudukkottai farmer petition

Pudukkottai farmer petition on Eucalyptus Plantation: புதுக்கோட்டை மாவட்டத்தின் வனப்பகுதியில் வளர்க்கப்படும் யூகலிப்டஸ், முந்திரி போன்ற வணிக மரங்கள் நீர்நிலைகள் மற்றும் மழைநீர் சமவெளிக்கு வருவதை தடுக்கிறதா என 6 பேர் கொண்ட குழு 2 மாதத்திற்குள் ஆய்வு அறிக்கை சமர்பிக்க மதுரை கிளை உயர்நீதிமன்ற வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மதுரை கிளை உயர்நீதிமன்ற
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 4:17 PM IST

மதுரை: புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய சங்க நிர்வாகி தனபதி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 1974ஆம் ஆண்டு வரை 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக பசுமையான காடுகள் இருந்தன.

மேலும், இவை புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குளங்களுக்கு நீராதாரமாக விளங்கியதோடு, விவசாயத்திற்கும் உறுதுணையாக இருந்தது. ஆனால், 1974ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வணிக நோக்கில் யூகலிப்டஸ், முந்திரி போன்ற மரங்கள் தமிழக வனத்தோட்ட கழகத்தால் நடப்பட்டன.

இந்த மரங்களை வளர்ப்பதற்காக வனப்பகுதியில் உள்ள காடுகளை அழித்து அகழிகளையும், பெரிய மண் தடுப்புகளையும் அமைத்து வருகின்றனர். இதனால் மழை நீரானது அதனுடைய ஓட்டத்தில் செல்லாமல் தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக கிராமங்களில் உள்ள கண்மாய், குளம் நிறையாமல், விவசாயம் தடைபடுகிறது.

இதனால் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளதோடு, புதுக்கோட்டை மாவட்டத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை அமைப்பு சிதையும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து வனப்பகுதியில் யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டு வருகிறது. ஆகவே, புதுக்கோட்டை மாவட்டத்தில் யூகலிப்டஸ் மரங்களை நட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை நீக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (ஆகஸ்ட் 2) நீதிபதிகள் சுரேஷ் குமார், அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நகரமயமாக்கலால் நாள்தோறும் விவசாயம் அழிந்து வருகிறது. விவசாய நாட்டில், விவசாயத்தை அழிக்கக் கூடாது. விவசாய சாகுபடி நிலங்கள் குறைந்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை பெய்தால் தான் காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறது.

நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் குறைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாம் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை அதிகரிக்கும். தற்போது துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்களை இறக்குமதி செய்கிறோம். காகித ஆலை வேண்டுமா? உணவு வேண்டுமா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் வனப்பரப்பில் யூகலிப்டஸ் மரங்கள் அதிகம் வளர்ப்பதால், இதற்காக ஆங்காங்கே ஏற்படுத்தும் தடுப்புகளால் சமவெளி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு மழை நீர் வருவது தடுக்கப்படுகிறதா என 6 பேர் கொண்ட வல்லுநர் குழு ஆய்வு செய்து 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: குட்கா முறைகேடு வழக்கு; முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.