புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை முழுமையாக அமலுக்கு வந்தது. கோடை கால விடுமுறை முடிய உள்ள நிலையில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளும் ஜுன் 6ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிவடையும் நிலையில் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு சமூக அமைப்புகள் விடுமுறை நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், இன்று புதுச்சேரி கல்வித்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “புதுச்சேரியில் கடும் வெயில் காரணமாக ஜீன் 6 அன்று பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
இதுவரை தமிழ்நாடு கல்வி வாரியத்தின் கீழ் இருந்த புதுச்சேரி அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இக்கு மாறியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் 2024-25 கல்வியாண்டில் மாறின” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!