ETV Bharat / state

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 முதல் மீனவர்களுக்கு ரூ.8000 நிவாரணம் வரை.. புதுச்சேரி பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் என்ன? - Puducherry Budget 2024 - PUDUCHERRY BUDGET 2024

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூபாய் 1000 மானியம் உதவித்தொகை, மீனவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் மாதம் ரூ.8,000 உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 4:29 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ரூ.12,700 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மாணவர்களுக்கான அறிவிப்பு: புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 மூன்றாண்டுகளுக்கு வழங்கப்படும், அரசு மற்றும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலனி(shoes), புத்தகப்பை இலவசமாக வழங்கப்படும்.

பிராந்திய அளவில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000 என ஊக்கத்தொகை வழங்கப்படும். பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத்தொகை வழங்கப்படும், கிராமப்புற மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுத ஏதுவாக 11-ஆம் வகுப்பு முதலே பயிற்சி வழங்க ஏற்பாடும் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைனில் ரேஷன் சேவை: குறிப்பாக, குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வு விவகாரங்கள் துறை மூலம் நடப்பு நிதியாண்டு முதல் இலவச அரிசி மற்றும் மானிய விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை, சமையல், எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்படும். குடிமைப் பொருள் வழங்கல் துறை மூலம் அனைத்து சேவைகளும் இணைய வழியில் செயல்படும் எனவும் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது உள்ளிட்ட பணிகள் பொதுச் சேவை மையம் மூலம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மீனவர்களுக்கான அறிவிப்பு: மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை ரூ.6,500லிருந்து ரூ.8,000-ஆக உயர்த்தப்படும் எனவும் மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3,000லிருந்து ரூ.6,000-ஆக உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், புதுச்சேரி கடலோர கிராமங்களில் கடல் அரிப்பைத் தடுக்க ரூ.22 கோடி செலவில் இடைக்கால அவசர கால தடுப்புகள் அமைக்கப்படும், செல்லிப்பட்டில் உடைந்த தடுப்பணை ரூ.20 கோடி செலவில் புதிதாகக் கட்டப்படும் என அறிவித்துள்ளார்.

கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டி: 'முதல்வரின் புதுமைப்பெண்' என்ற புதிய திட்டத்தின் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 500 கல்லூரி மாணவியர் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க 75 விழுக்காடு மானியம் அல்லது ரூ.1 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான அறிவிப்பு: கால்நடைத்துறை மூலம் 100% மானியத்தில் உயர் மரபணு திறன் கொண்ட ஆயிரம் பெண் கன்றுகளை உற்பத்தி செய்யப்படும், மாடித் தோட்டம் அமைக்க ஆடிப்பட்டம் மூலம் ஒரு வீட்டிற்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும், தீவனம் தயாரிக்கும் இயந்திரம் 400 விவசாயிகளுக்கு வழங்கப்படும், காரைக்காலில் தனி அருங்காட்சியகம் எனவும் முதலமைச்சர் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ அங்காளன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் 5 நிமிடம் கழித்து அவைக்குள் வந்தனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.