ETV Bharat / state

நெல்லை அருகே பைப்லைன் அமைப்பதில் இரு குழுவினரிடையே தள்ளுமுள்ளு.. என்ன நடந்தது? - water issue in tirunelveli

Water issue In Tirunelveli: திருநெல்வேலி மாவட்டம், அலவந்தான்குளம் கிராமத்திற்கு புதிய பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை திருத்து மற்றும் பள்ளிக்கோட்டை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டபோது, மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Water Issue In Tirunelveli
நெல்லையில் அலவந்தான்குளத்திற்கு புதிய பைப்லைன் அமைக்க எதிர்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 6, 2024, 5:12 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், மானூர் அடுத்த அலவந்தான்குளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பள்ளிக்கோட்டை, நெல்லை திருத்து உள்ளிட்ட கிராமங்களுக்கு பொதுவாக இருந்த ஒரு கிணற்றிலிருந்து, ஒரே பைப்லைன் மூலம் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அலவந்தான்குளம் கிராமத்தில் மக்கள்தொகை அதிகரித்ததன் காரணமாக, தனி மோட்டார் பொருத்தி, தனி பைப்லைன் அமைக்க வேண்டும் என திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தது. ஒரே வேளையில் 3 கிராமங்களுக்கும் தண்ணீர் சென்று கொண்டிருந்த சூழலை மாற்றியதால், புதிய பைப்லைன் அமைக்க பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். புதிய பைப்லைன் அமைக்க வேண்டும் எனக் கோரி அலவந்தான்குளம் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி புதிய பைப்லைன் அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை திருத்து மற்றும் பள்ளிக்கோட்டை கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனையறிந்த போலீசார், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மானூர் வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், புதிய பைப்லைன் அமைக்கக் கூடாது என, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஒரு குழுவினர் ஈடுபடத் தொடங்கினர். மற்றொரு பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் புதிய பைப்லைன் அமைக்கும் ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை மறித்து போராட்டத்திலும் ஈடுபடத் தொடங்கினர்.

இந்த நிலையில், 2 குழுவாக போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மூதாட்டி ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தற்கொலை செய்ய முயன்ற நபரையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்துள்ளதுடன், புதிய பைப்லைன் அமைக்கும் பணிகள் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் புதிய பைப்லைன் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஒருசாருக்கு ஆதரவாக போலீசாரும், அரசும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து அடுத்த கட்டமாக வாக்காளர் அடையாள அட்டைகள், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கவும், தேர்தலைப் புறக்கணிக்கவும் முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வீட்டில் தந்தை சடலம்.. தந்தையின் கனவை நனவாக்க கண்ணீருடன் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.