ETV Bharat / state

ஊரணி நிலத்தை ஆக்கிரமிக்கும் ஸ்பிக் நிர்வாகம்... நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் ஊர் மக்கள் மனு! - Protest against Thoothukudi SPIC - PROTEST AGAINST THOOTHUKUDI SPIC

Land encroachment by SPIC: தூத்துக்குடியில் ஸ்பிக் நிர்வாகம் நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகக் கூறி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

மனு அளிக்க வந்த முத்தையாபுரம் மக்கள்
மனு அளிக்க வந்த முத்தையாபுரம் மக்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 1, 2024, 8:06 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள ஊரணி நிலத்தை ஸ்பிக் நிறுவனம் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும், உடனடியாக அந்த இடத்தை மீட்டு முத்தையாபுரம் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம், நடைபாதை பயிற்சி பூங்கா அமைத்து தர வேண்டி அப்பகுதி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கலெக்டரிடம் மனு அளிக்க வந்த முத்தையாபுரம் மக்கள் (னVideo Credits - ETV Bharat Tamilnadu)

தூத்துக்குடி, முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் உள்ள ஊரணி மற்றும் காலி மனை நிலம் சுமார் 10 ஏக்கரை முத்தையாபுரம் மக்கள் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், 2008-ல் முத்தையாபுரம் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு இந்த ஊரணி நிலமும் தொழில் அபிவிருத்தி வகைபாட்டுக்கு மாற்றப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாக எந்த பயன்பாடும் இல்லாமல் இருந்துள்ளது.

இதனிடையே, இந்த நிலத்தை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், மாணவர்கள் பயன்படும் வகையில் விளையாட்டு மைதானம், நடைபாதை பயிற்சி பூங்கா உள்ளிட்டவை அமைத்து தர வேண்டி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக அரசிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த ஊரணி காலி நிலத்தை ஸ்பிக் (SPIC) நிர்வாகம் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள், ஸ்பிக் நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பிய படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த முத்தையாபுரம் சுற்றுவட்டார வணிகர் சங்க தலைவர் சின்னதங்கம் கூறியதாவது, ஸ்பிக் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டு அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காகப் பூங்கா உள்ளிட்டவை அமைத்து தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இந்த கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்" எனக் கூறினார்.

முன்னதாக ஸ்பிக் நிர்வாகம், நிலத்திற்கான குத்தகை பாக்கி 168 கோடி ரூபாய் கட்டாமல் இருந்த வழக்கில், குத்தகை பாக்கியை கட்டவும், ஆலை மற்றும் குடியிருப்பு அமைந்துள்ள பகுதி, மற்ற இடங்களை பொது பயன்பாட்டிற்கு கொடுக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மாஞ்சோலை தொழிலாளர்களை சந்திக்கச் சென்ற கிருஷ்ணசாமி.. போலீசாருடன் வாக்குவாதம் செய்த புதிய தமிழகம் கட்சியினர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.