ETV Bharat / state

மதுரை - புனலூர் ரயில் பெட்டியில் சமையல் அடுப்பு, அடுப்புக்கரி பறிமுதல்; தனியார் சுற்றுலா மேலாளர் கைது! - Madurai to Punalur train - MADURAI TO PUNALUR TRAIN

Tourism manager arrested for carrying charcoal in train: திருநெல்வேலி ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ரயில் சோதனையின் போது, சமையலுக்காக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரி, அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் புகைப்படம்
கைது செய்யப்பட்டவர் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் புகைப்படம் (HOTO CREDITS- ETV BHARAT TAMIL NADU)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 30, 2024, 5:39 PM IST

மதுரை: தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களை தவிர்க்கும் வகையில், எளிதில் தீப்பற்றக்கூடிய எரிவாயு சிலிண்டர், ஸ்டவ், மண்ணெண்ணெய், பெட்ரோல், அமிலங்கள் மற்றும் வெடிக்கக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி கொண்டு செல்பவர்கள், 1989 ரயில்வே சட்டப் பிரிவுகள் 67, 164 மற்றும் 165ன் படி தண்டிக்கப்படுவார்கள்.

மதுரையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி அதிகாலை, சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலின் போது ஏற்பட்ட தீ விபத்தில் 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, சுற்றுலா ரயில் பெட்டிகளில் தொடர்ந்து தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் திருநெல்வேலி வர்த்தக பிரிவு ஆய்வாளர் எம்.அரவிந்த் திடீர் சோதனை மேற்கொண்டார். இந்தச் சோதனையின்போது, 59 பயணிகள் பயணித்த மதுரை - புனலூர் ரயிலில் இணைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயில் பெட்டியில் சமையலுக்கு தயாராக வைக்கப்பட்டிருந்த அடுப்புக்கரி கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, அவற்றை ரயிலில் கொண்டு வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தனியார் சுற்றுலா மேலாளர் சதீஷ் சந்த்தும் (64) கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக அவர் திருநெல்வேலி ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், கண்டுபிடிக்கப்பட்ட அடுப்புக்கரி, அடுப்பு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுற்றுலா ரயில் பெட்டிகள் பதிவு செய்யும்போதே எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு சொல்ல மாட்டோம் என்ற எழுத்துப்பூர்வ உறுதிமொழி வாங்கப்படுகிறது. ஆனால், அதையும் மீறி எதிர்வரும் அபாயத்தை உணராமல் சுற்றுலா பயணிகளை கவருவதற்காக இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் சுற்றுலா நிறுவனம் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை, அபராதம், ஏற்பட்ட சேத மதிப்பு ஆகியவை விதிக்கப்படுகின்றன. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ரயில் நிலையங்களில் பதாகைகள் அமைப்பது, அடிக்கடி பொது அறிவிப்புகள் செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், சக பயணிகள் யாராவது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்தால், அது பற்றிய தகவல்களை உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்கு தெரிவிக்க வேண்டுமென ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. தீ விபத்துகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல் பயணிகள் ரயில்களில் ஏற்றப்படும் சரக்குகளும் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டே அனுப்பப்படுகின்றன.

இதையும் படிங்க: வண்ணாரப்பேட்டை செருப்பு கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது! - Petrol Bomb Attack

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.