ETV Bharat / state

திண்டுக்கல் நீதிமன்றத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்த கைதி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! - Prisoner suicide attempt - PRISONER SUICIDE ATTEMPT

PRISONER SUICIDE ATTEMPT: திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் 2வது மாடியிலிருந்து கைதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல்
திண்டுக்கல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 15, 2024, 4:57 PM IST

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. இவர்களுக்கு இடையே கடந்த 2023ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்ட நிலையில், திருமூர்த்தி அவரது மனைவி மாலதி தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்தார். இது தொடர்பாகப் பழனி தாலுகா போலீசார் திருமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், திருமூர்த்தி தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், வழக்கின் விசாரணைக்காகத் திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு போலீசாரால் அழைத்து வரப்பட்டார்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் இரண்டாவது மாடியில் மகிளா நீதிமன்றம் செயல்பட்டு வரும் நிலையில், போலீசாரால் அழைத்து வரப்பட்ட திருமூர்த்தி எதிர்பாராத நிலையில், 2வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் பலத்த காயம் அடைந்த திருமூர்த்தியை போலீசார் உடனடியாக 108 அம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது திருமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக கடந்த மாதம் இதேபோல் விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஷாஜகான் என்ற குற்றவாளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் 3வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸின் அடுத்த படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டார்... லோகேஷ் கனகராஜ் - Benz Tamil Movie

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.