ETV Bharat / state

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உயிரிழப்பு - பின்னணி என்ன? - Prisoner dies

போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 16, 2024, 10:43 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் தனியார் காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண், மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இச்சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையும் படிங்க : பெளர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! - spl buses to tiruvannamalai

இதுகுறித்து குடியாத்தம் தலைமை அரசு மருத்துவமனையில் இருந்து, குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில், தந்தை தான் மகளை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

இதனிடையே சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
கடந்த ஏழாம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் உடல்நிலை சரியில்லாததால் வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான மருத்துவப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்.16) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.