ஈரோடு: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கோயம்புத்தூர் மாவட்டம், ரத்தினபுரியைச் சேர்ந்த கெளரி சங்கர் (25) என்ற விசாரணைக் கைதி, கோவை சரவணம்பட்டி காமராஜபுரத்தைச் சேர்ந்த கெளதம் (30) என்பவருடன் வீடியோ காலில் பேசி உள்ளார்.
கெளரி சங்கர் மற்றும் கெளதம் இருவரும் பேசும் முழு வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறையின் பாதுகாப்பு ஆவணமான வீடியோ கால் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த உரையாடலில், கெளதம் சிறையில் விசராணைக் கைதியாக இருக்கும் கெளரி சங்கரிடம், "நீ பயப்படாதே சிறை முதன்மைக் காவலர் ராஜாராம் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். நான் அவருக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்பி உள்ளேன். ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்றும், ராஜாராம் அவர்களை நான் கேட்டேன் என்று சொல்” என இருவரும் பேசும் வீடியோ கால் பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "ஆண் பேராசிரியர்களுடன் இணைத்து பேசுகின்றனர்" - நெல்லை மாணவிகள் வேதனை.. கல்லூரி முதல்வர் அளித்த விளக்கம்? - students alleged clg administration
இந்நிலையில் சிறைத்துறையின் ஆவணமான வீடியோ கால் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவியது குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை விஜிலென்ஸ் டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி இன்று (செப்.13) சென்னையில் இருந்து கோபிசெட்டிபாளையத்துக்கு வந்தார்.
இதுதொடர்பாக சிறையில் இருக்கும் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தினார். கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, கெளதமிடம் இருந்து 2 செல்போன்கள், பேட்டரிகள், சிம்கார்டுகளை சிறைத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.