கோயம்புத்தூர்: கோவை பத்திரிகையாளர் மன்றத்தில், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அனைத்து குழந்தைகளுக்கும் சமமாக கற்கும் வாய்ப்பை பெறுவதற்கு வழிவகுப்பது கல்வி உரிமைச் சட்ட நோக்கமாகும்.
அரசின் குறிப்பிலும், செலவிலும் கல்வி அனைவருக்கும் சம வாய்ப்புடன் கிடைக்க அருகாமை பள்ளி அமைப்பு உலக நாடுகளிலும் நடைமுறையாக உள்ளது. தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்ற நோக்கத்தில், பள்ளிகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் வாய்ப்பு மறுக்கப்பட்டவர் மற்றும் நலிந்த பிரிவினருக்கு வழங்க வேண்டும்.
அருகாமையிலேயே அரசுப் பள்ளி இருக்கும்போது அரசு கல்வி தரும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போது, அரசை நம்பாமல் தனியார் பள்ளியில் சேர்ப்பது ஊக்கப்படுத்துவது, சட்டத்தின் 12 (1) (c) பிரிவின் நோக்கம் என்றும் சட்டத்தின் பிரிவு 8 மற்றும் 12(1)(c) ஆகிய இரண்டையும் முரண்பாடுடன் பார்க்க கூடாது. அவ்வாறு இருக்கும்போது அரசு சலுகை வழங்க இயலாது.
தற்போதைய அரசு, அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகின்றனர். 2024-2025 கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் குழந்தைகளுக்கு சமமான கற்றல் வாய்ப்புகளை பெறும் வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்க்க உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தகைய நடவடிக்கையை கர்நாடக மாநிலம் ஐந்தாண்டுகளாக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது. அரசாங்கம் தனது பொறுப்பில் கல்வி உரிமையை வழங்க முன் வரும்போது அதற்கு நீதிமன்றம் என்றும் துணை நிற்கும்.
மாவட்ட, மாநில, அகில இந்திய மற்றும் உலக நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் அரசுப் பள்ளியில் பெயரிலும் மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகள் ஆர்வமுடன் பல்துறை அறிவினைப் பெறுவதற்கு அனைத்து வாய்ப்புகளையும் தமிழ்நாடு அரசு உருவாக்கித் தர வேண்டும். மேலும், குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் முன்வர வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: ரீ ரிலீஸ் படங்களால் சிறிய பட்ஜெட் படங்களுக்கு பாதிப்பா? கேபிள் சங்கர் பிரத்யேக பேட்டி! - Re Release Flims