சென்னை: ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி இந்தியாவில் உள்ள கிறிஸ்தவ மக்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள ஈஸ்டர் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது, "நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக நமது கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு ஈஸ்டர் வாழ்த்துக்கள். இயேசு உயிர்த்தெழும் இந்த புனிதமான நாளில் அன்பு, நம்பிக்கை உணர்வை ஊக்குவித்து, அவரின் போதனைகள் நம்மை அமைதியின் பாதையில் கொண்டு செல்லட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து - "நம்பிக்கை அனைத்து இடங்களிலும் எதிரொலிக்கட்டும். ஒற்றுமை மற்றும் அமைதி நம் அனைவரையும் ஒன்றுசேர்வதற்கு ஊக்கமளிக்கட்டும். அனைவருக்கும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி - "அனைவருக்கும் ஈஸ்டர் ஞாயிறு நல்வாழ்த்துக்கள். இந்நாளில் மன்னிப்பு, புதுப்பித்தல், நம்பிக்கை ஆகியவை ஓர் உள்ளடக்கிய, சமமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்க நம் அனைவரையும் ஊக்குவிக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்: உலக உயிர்கள் அனைத்தையும் அன்பால் கவர்ந்த இயேசுபிரான் போதித்த தியாகம், பாவ மன்னிப்பு, அன்பு, சகோதரத்துவம், சமாதானம், சேவை மனப்பான்மை போன்ற உயரிய குணங்களை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் கிருஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை - "ஈஸ்டர் பண்டிகைகொண்டாடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நம்பிக்கையை உருவாக்கும் இத்திருநாளில் அனைவர் வாழ்விலும், அன்பும், மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் நிறைந்து மகிழ்வுடன் வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: "ஈஸ்டர் திருநாளான இன்று உலக மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கை, புத்துணர்வு மற்றும் நல்வாழ்வு வழங்கிடும் நன்னாளக அமையட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஒயிட் பால் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்! ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கத்திற்கு என்ன காரணம்? - Babar Azam