ETV Bharat / state

தேமுதிகவினர் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை அளிக்கலாம் - பிரமேலதா விஜயகாந்த! - vetpu manu thakkal

DMDK Willingness nomination: மக்களவை தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 19ம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

DMDK Willingness nomination
DMDK Willingness nomination
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:53 PM IST

சென்னை: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல் கட்டமாக நடக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 16) அறிவித்தது. இந்நிலையில், தேமுதிக தலைமை விருப்ப மனு தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "18வது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் நாடாளுமன்றத் தேர்தல் விருப்ப மனுக்களை மார்ச் 19ஆம் தேதி செவ்வாய்க் கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 20ஆம் தேதி புதன்கிழமை மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள் ஆவர்.

மேலும், நாடாளுமன்ற பொதுத் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 15 ஆயிரமும், தனித் தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூபாய் 10 ஆயிரமும் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மார்ச் 21 தேதி வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் தலைமை கழகத்தில் நேர்காணல் நடைபெறும்" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மன்சூர் அலிகான்? வேலூரில் தேர்தல் பிரச்சாரம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.