சென்னை: நாட்டின் பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பின் பிரதமர் மோடி முதன்முறையாக சென்னைக்கு வருகை தர இருந்தார். சென்னையில் வந்தே பாரத் உள்பட பல ரயில் சேவைகளை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் சென்னை பயணம் திடீரென ஒத்தி வைக்கப்படுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "பிரதமர் மோடி வரும் 20ஆம் தேதி சென்னை சென்ட்ரலுக்கு வருகை தந்து சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை, பேசின் பிரிட்ஜ் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிமனை, ஆரால்வாழ்மாெழி - நாகர்கோவில் மற்றும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டை வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல், நாகர்கோவில் டவுண் - நாகர்கோவில் சந்திப்பு - கன்னியாகுமரி இடையே நிறைவடைந்த இரட்டை வழித்தடங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் போன்றவற்றை கானொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார்
இந்நிலையில், திடீரென இந்தப் பயணம் தற்பொழுது நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சர்வதேச யோகா தினம்: "சேரா யோகாத்தான் 2024" 400க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் சூரிய நமஸ்காரம்! - CHENNAI International Yoga Day