ETV Bharat / state

"உலகத்தரத்துக்கு உயர்த்தப்படும் தூத்துக்குடி துறைமுகம்! விரைவில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் என்னென்ன?" - Tuticorin VOC Port - TUTICORIN VOC PORT

Tuticorin VOC Port development scheme: 2024-25 நிதியாண்டில், வளர்ச்சி திட்டங்கள் மூலம் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 50 மில்லியன் சரக்குகளை கையாள முடியும் என்றும், உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக தூத்துக்குடி துறைமுகம் உருவாக்கப்படும் என்றும் துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துறைமுகம்
தூத்துக்குடி துறைமுகம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 12:56 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தின் ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வருடத்திற்கு 81.05 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளும் திறனுடன் தென்தமிழகத்தில், பொது சரக்குகளைக் கையாளுவதிலும் சரக்குப் பெட்டகங்களைக் கையாளுவதிலும் முன்னணி துறைமுகமாக திகழ்கிறது.

2024-25 நிதியாண்டில், ஜூலை மாதம் 25-ஆம் தேதி வரை வ.உ.சி துறைமுகம் 13.17 மில்லியன் டன்கள் சரக்குகளை கையாண்டு 5.29 சதவிகித வளர்ச்சியும், சரக்குபொட்டகங்களை பொருத்தவரையில் 2.47 டிஇயுக்களையும் கையாண்டு 4.73 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளது.

இத்துறைமுகத்தில் பொது சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக 306 மீட்டர் நீளமும், 14.20 மீட்டர் மிதவை ஆழமும் கொண்ட பெரிய கப்பல்களை கையாளுவதற்கு வசதியாக வடக்கு சரக்கு தளம் 3-ஐ (NCB-3) ஆழப்படுத்தும் பணி அக்டோபர் மாதம் துவங்க உள்ளது.

வருடத்திற்கு 7 மில்லியன் டன் சரக்குகளை கையாளுவதற்கு வசதியாக M/S.JSW தூத்துக்குடி பல்நோக்கு முனையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் வடக்கு சரக்கு தளம் 3-ஐ இயந்திரமயமாக்கும் திட்டமானது 18 மாதத்திற்குள் முடிப்பதற்கும் திட்டமிட்டுள்ளது. இத்தளத்தின் கட்டமைப்புப் பணிகள், தரைதளம் அமைக்கும் பணிகள், கப்பலை கையாளும் போது கயிறுகள் கட்டுவதற்குரிய கட்டுத்தறி அமைத்தல் மற்றும் தடுப்பு காப்பு அமைத்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்துள்ளன.

மேலும், வரும் செப்டம்பர் மாதம் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என்பதை கருத்தில் கொண்டு தளங்களை சீரமைத்தல், இயந்திரங்களை இயக்குவதற்கு வசதியாக இரயில் பாதை அமைத்தல் மற்றும் அதன் செயல்பாட்டுப் பணிகள் போன்ற பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிலக்கரி தளம்-1 செயல்படாத நேரத்தில் தளத்தினை பயன்படுத்துவதை கருத்தில் கொண்டு 0.72 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கை வருடத்திற்கு அதிகரித்திட திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கன்வேயர் இணைப்பு கட்டுமான பணியானது வரும் அக்டோபர் 30 ஆம் தேதி முடிக்கப்படும்.

துறைமுகத்தில் வடக்கு சரக்கு தளம் 2-ல் கூடுதலாக ஒரு நாளைக்கு 25,000 டன் சரக்குகளை கையாளக்கூடிய 100 டன் திறன் கொண்ட நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன.

வடக்கு சரக்கு தளம் 2 மற்றும் 3 ஒவ்வொன்றிலும் கூடுதலான சரக்குதளப் பகுதி 5,000 சதுர மீட்டர் அளவில் உருவாக்கப்படும். இப்பணியானது நவம்பர் 2024-ல் முடிக்கப்படும். மேலும் சரக்கு தளம் 5 மற்றும் 6-ல் காற்றாலை இறகுகளை தடையில்லாமல் கையாளுவதற்கு வசதியாக 2 கிராலர் இயந்திரங்கள் செப்டம்பர் 2024-ல் நிறுவப்படவுள்ளன.

இந்த நிதியாண்டு முடிவில் துறைமுகம் 50 மில்லியன் டன்னுக்கு மேல் சரக்குகளை கையாள்வதை இலக்காக கொண்டுள்ளது. சர்வதேச சரக்கு போக்குவரத்து வர்த்தகத்திற்கு தடையற்ற சரக்கு கையாளுதல் மற்றும் சரக்குக் கையாளும் செயல்பாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க துறைமுகம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வ.உ.சி துறைமுகத்தை உலகத் தரம் வாய்ந்த துறைமுகமாக உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. பெருங்களத்தூர் பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்.. இனி ஜிரோ டிராஃபிக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.