சென்னை: சினேகம் அறக்கட்டளை வழக்கு தொடர்பாக பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சினேகம் பவுண்டேஷன் யாருக்கு சொந்தமானது? என பாஜக பிரமுகரும், நடிகையுமான ஜெயலட்சுமி மற்றும் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் ஆகியோர், கடந்த 2022ஆம் ஆண்டு மாறி மாறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துக் கொண்டனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ஜெயலட்சுமி மற்றும் சினேகன் ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில், சினேகம் பவுண்டேஷன் பெயரில் நடிகை ஜெயலட்சுமி பண மோசடியில் ஈடுபட்டதாக, பாடலாசிரியர் சினேகன் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி, மீண்டும் பாடலாசிரியர் சினேகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அவர், சம்பவம் குறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். பின்னர் இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள், பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கடந்த 2022ஆம் ஆண்டு பாடலாசிரியர் சினேகன் மீது அவதூறு பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, சினேகம் அறக்கட்டளை பண மோசடி புகார் தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என பாடலாசிரியர் சினேகனும் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இது குறித்து விசாரணை செய்த நீதிபதிகள் ஜெயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி மீது, மோசடி உள்ளிட்ட இரு பிரிவின் கீழ் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து, இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த சினேகம் அறக்கட்டளை வழக்கு குறித்து தற்போது சென்னை மற்றும் திருமங்கலம் போலீசார் திருமங்கலம் பகுதியில் உள்ள பாஜக பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வர உள்ளதால், சினேகம் அறக்கட்டளையில் நடத்தப்பட்ட வங்கி பரிவர்த்தனைகள், ஆவணங்கள் உள்ளிட்டவைகள் குறித்து போலீசார் 2 மணி நேரமாக இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத் தொகை: வேளாண் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது என்ன?