ETV Bharat / state

தஞ்சையில் காணாமல் போன இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு! போலீசார் விசாரணை! - Thanjavur YOUNGSTER death case - THANJAVUR YOUNGSTER DEATH CASE

Ayyanallur Youngster death case: கும்பகோணம் அருகே அய்யாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், நண்பர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் புகைப்படம்
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 15, 2024, 2:23 PM IST

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் சரகம் அய்யாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல் (25). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த ஜூன் 12ஆம் தேதி இரவு முதல் மாயமானதாக கூறப்படுகிறது.

இவரின் அலைபேசியையும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில், இது குறித்து அவர் பெற்றோர் தம்பிதுரை - ஆனந்த வள்ளி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை கோவிலாச்சேரி அருகே உள்ள பழவாற்றங்கரையில் கோகுலின் உடல் எரிந்த நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்தில் திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையிலான போலீசார் மற்றும் தஞ்சையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த தடய அறிவியல் துறையினர் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இளைஞர் கோகுல் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் எஸ்.வி.சேகர் தாக்குவதாக முதலமைச்சரிடம் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.