ETV Bharat / state

ரூ.14,000 கடன் பிரச்னை.. நண்பரின் இரு குழந்தைகளைக் கொன்றவர் கைது.. ஆம்பூரில் பரபரப்பு! - Children murder in Ambur - CHILDREN MURDER IN AMBUR

வேலூர் மாவட்டத்தில் சடலமாக இரு குழந்தைகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்துச் சென்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதான வசந்தகுமார்
கைதான வசந்தகுமார் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2024, 6:53 AM IST

Updated : Sep 20, 2024, 7:20 AM IST

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான இவருக்கு தர்ஷன் (4) மற்றும் யோகித் (6) என இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர். மேலும், யுவராஜின் நண்பரான வசந்தகுமார் என்பவர், யுவராஜின் குழந்தைகளை வெளியே அழைத்துச் சென்று திண்பண்டங்கள் வாங்கித் தருவது வழக்கம் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அதேபோல் வசந்த் நேற்று மாலை 2 குழந்தைகளையும் கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் வசந்த் மற்றும் 2 குழந்தைகள் வீடு திரும்பாததால், வசந்த்தின் செல்போனுக்கு யுவராஜ் அழைத்துள்ளார். அப்போது, செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனால் அச்சமடைந்த யுவராஜ், உடனடியாக இதுகுறித்து ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் பேரில் குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காணாமல் போன இரண்டு குழந்தைகளும், வேலூர் மாவட்டம் சிங்கல்பாடி அடுத்த ஏரிப்பட்டி செங்காத்தம்மன் கோயிலின் பின்புறம் சடலமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: சப் -இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற வாலிபர்கள்.. வாகன சோதனையின்போது நெல்லையில் பயங்கரம்!

பின்னர் அங்கு சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா தலைமையிலான போலீசார், இரண்டு குழந்தைகளின் உடலையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வசந்த் என்பவரை போலீசார் தேடி வந்தனர். அதேநேரம், வசந்த் குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், வசந்த்தை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், வசந்தகுமார் ஒரு பொறியியல் பட்டதாரி. இவரிடம் கட்டிடத் தொழிலாளியாக யோகராஜ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், யோகராஜ் வசந்தகுமாரிடம் 14 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் யோகராஜ் காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஆனால், வசந்தகுமாரின் மனைவியிடம் யோகராஜ் கடனை திருப்பிச் செலுத்திவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வசந்தகுமாரின் மனைவி, தன்னிடம் கடனாக கொடுத்த பணத்தை வாங்கவில்லை என வசந்த்குமார் பொய் கூறியதாக நினைத்து, வசந்தகுமாரிடம் தகராறில் ஈடுபட்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் வசந்தகுமார் அதிக மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் தனது மனைவியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தன்னுடன் மீண்டும் வாழ வைக்க வேண்டும் என யோகராஜிடம் வசந்த்குமார் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் இதற்கு யோகராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், யோகராஜின் 2 குழந்தைகளை வைத்து யோகராஜை மிரட்ட வசந்த்குமார் நினைத்துள்ளார். ஆனால் அதற்குள் அந்த இரண்டு குழந்தைகளையும் வசந்தகுமார் கொன்றுள்ளார் என தெரிய வந்துள்ளது.

Last Updated : Sep 20, 2024, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.