ETV Bharat / state

மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை! - மதுரை குடும்பம் தற்கொலை

Madurai Family suicide: மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 2, 2024, 12:33 PM IST

Updated : Mar 5, 2024, 4:12 PM IST

மதுரை: அனுப்பானடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(40) என்பவர் தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சிலைமான் அருகே வைகை ஆற்று பாலத்தின் கீழே நேற்று (வெள்ளிக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

அப்போது சடலத்தின் அருகே செந்தில்குமார் எழுதியிருந்த கடிதமும் கைப்பற்றப்பட்டது. அக்கடிதத்தில் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்படுவதால் தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சிலைமான் போலீஸார் இது தொடர்பாக, அனுப்பானடியில் உள்ள அவரது மனைவி வீர செல்விக்குத் தகவல் தெரிவித்தனர்.

கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி வீர செல்வி, தனது இரு மகள்களான எட்டாம் வகுப்பு பயின்று வந்த தனுஸ்ரீ (13), நான்காம் வகுப்பு பயின்று வந்த மேகா ஸ்ரீ(8) ஆகியோருடன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பான தகவலின் பெயரில் தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று வீர செல்வி மற்றும் அவரது இரு மகள்களின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்கொலை செய்துகொண்ட வீர செல்வி மதுரை கூர்நோக்கு இல்லத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்

இதையும் படிங்க: கன்னியாகுமரி அருகே கன்வேயர் பெல்ட்டில் சிக்கி பெண் பலி!

Last Updated : Mar 5, 2024, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.