ETV Bharat / state

கருப்பு சட்டை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை.. கோவையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்தது என்ன? - TN Governor RN Ravi - TN GOVERNOR RN RAVI

TN Governor R.N.Ravi: சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில், மாணவர்கள் சிலர் கருப்பு சட்டையும், மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்து வந்ததால் அவர்களை காவல்துறையினர் அரங்கிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள்
கருப்புச் சட்டை அணிந்த மாணவர்கள் (Credits - Raj Bhavan X Page and ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 10, 2024, 5:43 PM IST

கோயம்புத்தூர்: கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் 'Building Bharat - Journey towards 2024' எனும் தலைப்பில் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.

சம்பவி சங்கல்ப், Young Indians, சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரா மற்றும் பி.எஸ்.ஜி கல்வி நிறுவனம் ஆகியன சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.

பின்னர் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர், "சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வருங்காலத்தில் உயரிய பதவிகள் வகிக்கவுள்ள இளைஞர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களது கடின உழைப்பு பாராட்டத்தக்கது.

தேசத்தின் வளர்ச்சியில் அரசியல் பிரதிநிதிகளின் பங்கும், அரசு அதிகாரிகளின் பங்கும் மிக முக்கியமானதாகும். மக்களின் குறைகளை கேட்டு அறியவும், அவர்களுக்கான கொள்கைகளை வகுக்கவும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது.

குறிப்பாக கிராமப்புற மற்றும் பின் தங்கிய பகுதிகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எழுதி இளைஞர்கள் தேர்ச்சி பெற வேண்டும். அவர்கள் அதிகாரிகளாக வரும் பொழுது அவர்கள் சார்ந்த பகுதிகளின் பிரச்னைகளை உணர்ந்து அந்த மக்களின் வலிகளை உணர்ந்து செயல்படுவார்கள்.

நானும் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று வந்துள்ளேன். மண்ணெண்ணெய் விளக்கில் படித்துள்ளேன். பள்ளிக்காக 8 கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளேன். என்னுடைய கனவும், எனது பெற்றோர்களின் உழைப்பும் தான் என்னை இந்த அளவிற்கு கொண்டு வந்துள்ளது.

சிவில் சர்வீஸ் பிரிவில் ஏராளமான வாய்ப்புகள் தற்போது உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் இளைஞர்கள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பலன்களை அனுபவிக்க நாங்கள் இருக்க போவதில்லை.

இளைஞர்கள் தான் அந்த பலனை அனுபவிக்க போகின்றனர். இளைஞர்கள் தான் இந்த தேசத்தின் சொத்து. அந்த அடிப்படையில் இளைஞர்கள் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து தேசத்தின் வளர்ச்சிக்காக செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

கருப்பு ஆடை அணிந்து வந்த மாணவர்களுக்கு தடை: முன்னதாக ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த மாணவர்கள் சிலர் கருப்பு சட்டையும், மாணவிகள் கருப்பு துப்பட்டா அணிந்து வந்ததால் அவர்களை காவல்துறையினர் அரங்கிற்கு உள்ளே அனுமதிக்க மறுத்தனர். பின்னர் ஒரு சில மாணவர்கள் மட்டும் சட்டையை மாற்றிக்கொண்டு வந்தனர். போலீசாரின் கெடுபிடியால் ஒரு சில மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வராமல் தவிர்த்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்.. பதவி நீட்டிப்பா? - governor rn ravi

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.