ETV Bharat / state

நரிக்குறவப் பெண்கள் மீது போலீசார் தாக்குதல்.. திருமுல்லைவாயல் அருகே பரபரப்பு! - police assaulted Narikuravar - POLICE ASSAULTED NARIKURAVAR

Narikuravars attacked by Police: சென்னையில் போராட்டத்தில் ஈடுபட முயண்ற நரிக்குறவர் பெண்களை போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நரிக்குறவ பெண்களை தாக்கிய போலீசார்
நரிக்குறவப் பெண்களை தாக்கிய போலீசார் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 21, 2024, 6:57 PM IST

சென்னை: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் ஜெயா நகர் நரிக்குறவர் காலணி அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இதன் அருகே உள்ள இடத்தில் ராஜேஸ்வரி என்பவர் அவருக்குச் சொந்தமான நிலத்தில் நீதிமன்ற ஆணை உள்ளதாகக் கூறி, ஒரு பகுதியில் காவல்துறை பாதுகாப்புடன் சுற்றுச்சுவர் எழுப்பி வந்துள்ளார்.

நரிக்குறவ பெண்களை தாக்கிய போலீசார். (Credits- ETV Bharat Tamil Nadu)

இதனால் அங்கு வசிக்கும் நரிக்குறவர் இன மக்கள் இடையே பிரச்னை எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 காவல் உதவி ஆணையர்கள் தலைமையில், 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற நரிக்குறவர் இன மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, திருமுல்லைவாயலில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இது தொடர்பான சில வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், காவல் துறையினர் - நரிக்குறவர் மக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகின்றது. தொடர்ந்து ஆங்கிலத்தில் உள்ள நீதிமன்ற ஆணையை நரிக்குறவ மக்களிடம் கொடுத்து படிக்கச் சொல்வதும், படித்துக் காண்பிக்கும் போது அவர்கள் திணறுவதும், அதேபோல் கைது செய்யும்போது வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அப்போது பெண் போலீசார் சிலர், நரிக்குறவ பெண்களைத் தாக்குவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நரிக்குறவர் இன மக்கள் கூறுகையில், “நரிக்குறவர் காலனியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை, தலைமுறையாக நாங்கள் வசித்து வருகிறோம்.

இங்கு வீடு கட்டித் தரப்படும் என கூறிவிட்டு, எங்களை ஒதுக்குப்புறமாக அனுப்பிவிட்டனர். தற்போது அந்த இடத்தில் ராஜேஸ்வரி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார். இருப்பினும், நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டி எங்கள் இடத்தில் சுற்றுச்சுவரை எழுப்பி வருகிறார். இது குறித்து கேட்கப் போனால் வலுக்கட்டாயமாக எங்களை அடித்துத் துன்புறுத்தி, மண்டபத்திற்கு அழைத்து சென்றுவிட்டனர். வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்னர்.

இதையும் படிங்க: கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு ஆதார், ரேஷன், வாக்காளர் அட்டைக்கான முகாம் அமைக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.