ETV Bharat / state

"அனைத்து விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.மணி கோரிக்கை!

TN Agriculture Budget: வேளாண் பட்ஜெட்டில், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மாடு, ஆடு, கோழி, தேனீ வளர்ப்பு என அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டும் என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கோரிக்கை வைத்துள்ளார்.

PMK GK Mani talk about TN Agriculture Budget 2024
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து பாமக ஜி.கே மணி பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 8:32 PM IST

பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி பேட்டி

சென்னை: நடப்பாண்டிற்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தில், 2024 - 2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 4ஆவது முறையாக இன்று (பிப்.20) தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நி்திநிலை அறிக்கை குறித்து, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி, கடந்த 17 ஆண்டுகளாக நிழல் வேளாண்மை அறிக்கை வெளியிட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு அதனை ஏற்று கொண்டுள்ளது என்பது பாமகவிற்கு கிடைத்த வெற்றி.

வேளான்மை நிதிநிலை அறிக்கையில், ரூ.42 ஆயிரத்து 188 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண்மை துறையுடன் கால்நடை துறை, வருவாய்த்துறை, உணவு பாதுகாப்பு துறை என 8 துறைகள் இணைந்து செயல்படும் சூழல் உள்ளது. விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை என்பதை கூறுகின்றனர்.

மொச்சை விவசாயிகளிடம் இருந்து ரூ.19க்கு வாங்கப்படும் மொச்சை, கடையில் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விவசாயிகளிடம் நெல் குறைந்த விலையில் வாங்கி, விற்கப்படும் அரிசி கிலோ 65 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் போது இடையில் உள்ளவர்கள் அதிகம் பயன்பெறுகின்றனர். வேளாண்மையை மேம்படுத்த நான்கு இடங்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

நெல்லுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல, வட மாநிலங்களில் கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது போல, சிறுதானியங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். எண்ணெய் வித்துக்கள், பயிர் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி குறைந்து விட்டன, அவற்றை அதிகரிக்க வேண்டும்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையிலும் மாடு, ஆடு, கோழி, தேனீ வளர்ப்புக்கு என அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான விவசாயிகள் இருக்கும் இடங்களில் 10 பேருக்கு மானியம் வழங்குவதால் உற்பத்தியை மேம்படுத்த முடியாது.

உற்பத்திப் பொருட்களைப் பாதுகாக்கக் குளிர் பதனக்கூடங்கள் துவங்குவதற்கான அறிவிப்பு வராதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வகையான பயிர்கள் விளைவிக்கப் படுகின்றன. எந்தப் பகுதியில் எவை உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதைப் பார்த்து, அதன்படி தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலைகள் அதிகரித்தால் வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி பெருகும்.

விலை பொருளுக்கு ஏற்ப வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். 30 சர்க்கரை ஆலைகள் புனரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கரும்பு விவசாயிகள் நலிந்து விட்டன. கரும்பு சர்க்கரை ஆலைகளில் எத்தனாலை உற்பத்தி செய்கிறார்கள். வேளாண் நிதிநிலை அறிக்கையில் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு துறைகள் சார்ந்து இருப்பதாகவே பார்க்கிறோம்.

விவசாயிகளுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்க வேண்டும், நுகர்வோருக்கும் முறையான விலை கிடைக்க வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.4,500 வழங்க வேண்டும். வேளாண் நிதிநிலை அறிக்கையில், அறிவிக்கப்பட்ட ரூ.215 கரும்பு விவசாயிகளுக்குப் போதாது. அதுமட்டுமின்றி தென்னை விவசாயிகளின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகளுக்கான வரப்பிரசாதம்.. தமிழக பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.