ETV Bharat / state

தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்!

Dr Ramadoss: தமிழை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பாமக நிறுவனர்
ராமதாஸ்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 1:43 PM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாநிலை இன்று ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில், தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் தமிழ் மக்கள் இயக்கம், தமிழ் வழக்கறிஞர் செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் 25 பேர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டிருக்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, 7ஆம் தேதி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பது போராட்டக் குழுவினரின் முதன்மைக் கோரிக்கை. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு பாமக முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை, தனது வலியுறுத்தலை ஏற்று, கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்தார். உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசுக்கு எந்த தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி, உயர் நீதிமன்ற ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு.

இதைப் பயன்படுத்தி அலகாபாத், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய உயர் நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டது பெரும் தவறாகும். உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்காததால் தமிழ் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாகவில்லை.

ஓர் உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தின் மொழியை அறிவிப்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்று சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கும் நடைமுறையை கைவிடும்படி கடந்த 2015 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகத்துக்கு நாடாளுமன்ற நிலைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அதன் மீது கடந்த 9 ஆண்டுகளாக உள்துறை அமைச்சகம் முடிவெடுக்கவில்லை.

சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்தத் தீர்மானம் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும், தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த அனைவரும் உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பது ஐம்பது ஆண்டு கோரிக்கை. மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழி தமிழ் என்ற ஐம்பதாண்டு கால கனவு நனவாவதை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கென்யாவிற்கு சென்ற ஜாபர் சாதிக்..! உடன் சென்றவர்கள் யார்? பட்டியலைத் தேடும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.