ETV Bharat / state

பாஜகவுடன் இணைந்த பாமக.. கள நிலவரத்தை அன்றே கணித்த ஈடிவி பாரத்! - Lok Sabha elections

PMK and BJP Alliance:நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து பாமக தேர்தலை சந்திக்க உள்ளதாக கடந்த மாதம் ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. சில ஊடகங்கள் பாமக அதிமுகவில் இணையும் என்று கூறி வந்த நிலையில் கூட்டணி விவகாரத்தை உள்ளபடி தெரிவித்திருந்தது ஈடிவி பாரத் தமிழ்நாடு.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 19, 2024, 2:40 PM IST

Updated : Mar 19, 2024, 4:16 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - பாமக கூட்டணி உறுதியான நிலையில், 10 தொகுதிகளில் பாமக போட்டியிடும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, தமிழ்நாட்டின் தேர்தல் விறுவிறுப்பை பெற்ற நிலையில் அதிமுக - திமுக என்ற கூட்டணிகளின் நடுவே நாம் தமிழர் கட்சி, பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் என தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனிடையே, தமிழ்நாடு பாஜக தலைமையிலான புதிய அணியும் தமிழ்நாட்டில் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இக்கூட்டணியில் அமமுக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவைகள் அங்கம் வகிக்கின்றன. மிக முக்கியமாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றார்.

தாமரை பக்கம் சாய்ந்த மாம்பழம்: நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக போட்டியிட உள்ளதை உறுதி செய்துள்ளது. 2019-ல் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, தற்போது 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜகவுடன் கைக்கோர்த்துள்ளது.

இதனை உறுதி செய்யும் விதமாக ஈடிவி பாரத் தமிழ்நாடு பிப்ரவரி 13ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, பாஜக - பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் இணைந்து பாஜக - பாமக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதன் முடிவில், பாஜக கூட்டணியில் பாமக தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் போட்டியிடும், மேலும் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காகவும் பாமக உழைக்கும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அரசியலில் இன்றியமையாத இடத்தில் உள்ள பாமகவின் ஆதரவைப் பெற்றுவிட்ட பாஜகவிற்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, பிரதமர் மோடி பங்கேற்கும் சேலம் பாஜக பொதுக்கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "அதிமுகவை வீழ்த்தும் அஸ்திரம்" டெல்லி குழுவை மீண்டும் அழைத்த அண்ணாமலை.. இறுதியாகிறதா பாஜக - பாமக கூட்டணி!

Last Updated : Mar 19, 2024, 4:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.