ETV Bharat / state

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? “மின்சார தீவிரவாதம்”.. அன்புமணி ராமதாஸ் கடும் தாக்கு! - TN ELECTRICITY TARIFF HIKE

TN ELECTRICITY TARIFF HIKE: மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப்பெறும் வரை பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

PMK ANBUMANI RAMADOSS PROTEST
PMK ANBUMANI RAMADOSS PROTEST (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 19, 2024, 4:37 PM IST

சென்னை: தமிழகத்தில் சமீபத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஏராளமானோர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் மின் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், மாதம் ஒரு முறை மின் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், மின்சாரத் துறையில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க வேண்டும். நேர்மையான திறமையான அதிகாரிகளை நியமனம் செய்து நல்ல நிர்வாகம் நடைபெற வேண்டும். தமிழ்நாட்டில் 85 சதவீதம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள், இந்த மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 23 மாதத்தில் தமிழக அரசு மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதன் மூலமாக தமிழக அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. ஆனாலும், இவ்வளவு தொகை வந்த பிறகும் மின்சாரத்துறை நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வளவு தொகை வந்த பிறகும் நஷ்டத்தில் இயங்க காரணம் ஊழல் தான்.

தமிழக அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை 1 யூனிட் 3 ரூபாய் 40 பைசா. தமிழக அரசு தனியாரிடம் 11,500 மெகாவாட் மின்சாரத்தைப் பெறுகிறது, அது 1 யூனிட் 12 ரூபாய். அதனால் வேண்டுமென்றே திட்டமிட்டு தனியாரிடமிருந்து தமிழக அரசு மின்சாரத்தை பெற்று வருகிறது. தனியாரிடம் மின்சாரம் வாங்குவதன் மூலமாக கமிஷன் பெற்று ஊழல் நடைபெறுகிறது.

இந்த ஊழலை குறைத்தாலே மின்சாரத்துறை லாபத்தில் இயங்கும். திமுக தேர்தல் வாக்குறுதியாக, மாதம்தோறும் மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், தற்போது வரை அது நிறைவேற்றப்படவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்டாலின், "மின்சார கட்டணம் ஷாக் அடிக்கிறது" என்றார். இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால், மின் கட்டனத்தை திரும்பப்பெறும் வரை பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

மத்திய அரசு சொல்வதால் நாங்கள் மின் கட்டணத்தை ஏற்றியுள்ளோம் என தமிழக அரசு சொல்கிறது. மத்திய அரசு சொல்வதை தமிழக முதலமைச்சர் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு மட்டும் மத்திய அரசு சொல்வதை நாங்கள் கேட்போம் மற்றதற்கு நாங்கள் கேட்க மாட்டோம் என சொல்கிறாராம் முதலமைச்சர். மக்களுக்கு சுமை கொடுக்கும் இந்த விஷயத்தை தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொள்ளலாமா?

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் பல கட்சிகள் மற்றும் பல மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட்டுள்ளதால் பிற்காலத்தில் இது போன்ற நிகழ்கள் நடைபெறாமல் இருக்க சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்பட்ட மின்சாரத் திட்டங்களை செயல்படுத்த மறுக்கிறார்கள். காரணம். தனியாரிடமிருந்து மின்சாரம் பெற்றால் கமிஷன் கிடைக்கும். திமுக அரசு மக்கள் மீது மின்சார தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: 17 நாட்களில் 10 கொலைகள்.. மதுரை மாநகரை உலுக்கும் சம்பவங்களில் இளஞ்சிறார்கள்? உளவியல் காரணம் என்ன? - YOUNGSTERS INVOLVED IN ROWDYISM

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.