ETV Bharat / state

"கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகள்.. இதுதான் திராவிட மாடல் சேவையா?" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்! - ANBUMANI RAMADOSS

டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், கொட்டும் மழையிலும் டாஸ்மாக் கடைகளை திறப்பது தான் திராவிட மாடல் சேவையா? என பாமக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக், அன்புமணி ராமதாஸ்
டாஸ்மாக், அன்புமணி ராமதாஸ் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 16, 2024, 9:33 AM IST

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகத் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் பள்ளிகள், கல்லூரிகள், அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு அக்.16 ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டாஸ்மாக் பொதுத்துறை நிறுவனம் தான் என்றாலும், டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளிகள், அலுவலகங்களுக்குச் செல்வதில் இடையூறுகள் ஏற்படும் என்பதால் தான் அவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது மதுக்கடைகளை மட்டும் திறந்து வைக்க வேண்டிய தேவை என்ன? அது என்ன உயிர்காக்கும் மருந்தா? அல்லது மக்களால் தவிர்க்க முடியாத அத்தியாவசிய சேவையா?.

இதையும் படிங்க: சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை!

மது குடிக்க வேண்டும் என்று மதுக்கடைகளுக்கு செல்வோருக்கு மழை வெள்ளத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாதா? கொட்டும் மழையிலும் மதுக்கடைகளைத் திறந்து வணிகம் செய்வது தான் திராவிட மாடல் சேவையா? மழை, வெள்ளத்தால் சென்னையிலும் சுற்றுப்புற மாவட்டங்களிலும் ஆபத்துகள் அதிகரித்துள்ள நிலையில், மதுக்கடைகளை திறப்பதால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து, மழை ஓயும் வரை மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.