ETV Bharat / state

ஜெயங்கொண்டம் 18-ஆம் படி கருப்பசாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பிடிக்காசு திருவிழா! - pidikaasu festival jayankondam - PIDIKAASU FESTIVAL JAYANKONDAM

Pidikaasu festival jayankondam: ஜெயங்கொண்டம் 18-ஆம் படி கருப்பசாமி கோயிலில் சித்திரை திருநாளை முன்னிட்டு பிடிக்காசு திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

ஜெயங்கொண்டம் 18ஆம்படி கருப்பசாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பிடிக்காசு திருவிழா

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 5:12 PM IST

ஜெயங்கொண்டம் 18ஆம்படி கருப்பசாமி கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற பிடிக்காசு திருவிழா

அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே ஸ்ரீ பிரம்மசக்திபுரத்தில் 18ஆம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி 9ஆம் ஆண்டு பிடிக்காசு கொடுக்கும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கருப்பசாமிக்கு பால், தயிர், சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உறுமி மேளத்துடன், வான வேடிக்கையோடு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது அங்குக் கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பி வழிபட்டனர். பின்னர் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோயில் நிர்வாகியும், அருள்வாக்கு சித்தருமான தியாகராஜ சுவாமிகள் பக்தர்களுக்கு பிடிக்காசுகளை வழங்கி அருள்வாக்கு கூறினார். முன்னதாக கத்தி மேல் நடத்தல், கழுகு மரம் ஏறுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் ஆந்திரா, பாண்டிச்சேரி, சென்னை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், ஆரணி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இது குறித்து கோயிலுக்கு வந்த பக்தர்கள் பேசுகையில், “ஒவ்வொரு ஆண்டும் பிடிக்காசு திருவிழாவில் கலந்து கொள்வோம். கோயிலில் பூஜை செய்யப்பட்ட காசுகளை எடுத்துச் சென்று பூஜை அறையிலோ அல்லது பணப்பெட்டியிலோ வைத்தால் பணம் இரு மடங்கு சேரும்.

அதேபோன்று வீடு கட்டுதல், நகை வாங்குதல், நிலம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்களுக்கு இந்த காசுடன் பயன்படுத்தும் போது இரட்டிப்பு பயன்கிடைக்கும் என்பது பக்தர்களும் நம்பிக்கையாக உள்ளது” தெரிவித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் பூசாரிகள் மற்றும் விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: இணைய வர்த்தகத்தின் மூலம் ரூ.16 லட்சம் மோசடி.. பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல் துறையினர்! - Online Trading Fraudulent

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.