ETV Bharat / state

திருவான்மியூரில் கோயில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த சிவனடியார் உயிரிழப்பு! - CHENNAI TEMPLE ACCIDENT - CHENNAI TEMPLE ACCIDENT

Marundeeswarar Temple accident: திருவான்மியூரில் கோயில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பழனி
உயிரிழந்த பழனி (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 29, 2024, 3:49 PM IST

சென்னை: கோயில் கோபுரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவான்மியூரில் அமைந்துள்ள மருந்தீஸ்வரர் கோயிலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தூய்மை பணி நடைபெற்று வந்தது. இதில் கோயில் சுத்தம் செய்யும் பணியில் சுமார் 30 பேர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவனடியார் பழனி (44) என்பவர் கோயில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் கோபுரத்தில் ஏறி சுத்தம் செய்துகொண்டிருந்த பழனி எதிர்பாராதவிதமாக கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை சக பணியாளர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதிபாராத விதமாக சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி பழனி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் சுத்தம் செய்த சிவனடியார் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக பணியாளர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் வழக்கு; காவல்துறை கடும் வாதம்.. கோர்ட்டில் நடந்தது என்ன? - felix gerald bail

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.