ETV Bharat / state

அசல் பட்டா எங்கள் கையில்.. நிலம் அவர்கள் கையில்.. என்ன அநியாயம்! - குமுறும் மாற்றுத்திறனாளிகள்! - Disability people land Encroachment

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 26, 2024, 7:22 PM IST

Disability people land Encroachment Issue: அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி, ஈடிவி பாரத் செய்தி வாயிலாக அரசுக்கு தூத்துக்குடியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்
பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், பேரூரணி கிராமத்தில் தமிழக அரசு மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராம், கண் பார்வையற்ற, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் 14 பேருக்கு 2.5 சென்ட் நிலத்தை இலவச பட்டா மூலம் வழங்கினார். இதனால் இந்த பகுதிக்கு ராஜாராமன் நகர் (மாற்றுத்திறனாளிகள் காலனி) என்று பெயர் வைக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன்பின் இப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம், கரோனா பெருந்தொற்று காலம் மற்றும் பொருளாதார சூழ்நிலை ஆகியவை காரணமாக மாற்றுத்திறனாளிகள் தங்களது மனைகளில் வீடு கட்டிக்கொள்ளவில்லை. இதனிடையே மாற்றுத்திறனாளிகள் தங்களது மனையை பார்க்க வந்த போது, மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர், 14 மாற்றுத்திறனாளிகள் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் உடனடியாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். ஆனால் அவர்களது தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமுறுகின்றனர் மாற்றுத்திறனாளிகள்.

இந்த சூழ்நிலையை அறிந்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் பேசிய போது, அரசு தங்களுக்கு வழங்கிய நிலத்தை, மாற்றுத்திறனாளி அல்லாதோர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், அதனை மீட்டு தர வேண்டும் என்றும் ததும்பிய கண்ணீருடன் கூறியுள்ளனர்.

இது குறித்து நிலத்தை இழந்த மாற்றுத்திறனாளி மகேஸ்வரி ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “2015ஆம் ஆண்டு இடம் கொடுக்கப்பட்ட போதே உடனடியாக அங்கு கல் நட்டப்பட்டு, முள்வேலி போட்டிருந்தோம். கரோனா, வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களினால் எங்களால் வீடு கட்ட முடியாமல் போய் விட்டது. ஆனால் இப்போது எங்கள் இடத்தில் மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர் வீடு கட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துணை ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் ஆகியவற்றில் புகார் கொடுத்திருக்கின்றோம். இந்த நிலங்களில் பட்டா, சிட்டா உள்ளிட்டவைகளின் அசல் நகல் எங்கள் கையில் உள்ளது. கண் பார்வையற்றவர்கள், கால் ஊனமுற்றவர்களுக்கு அரசு கொடுத்த இந்த இடத்தில் எந்த அதிகாரத்தில் இவர்கள் வீடு காட்டினார்கள் என தெரியவில்லை. இந்த இடத்தை அரசு எங்களுக்கு கொடுப்பதற்கு முன்வர வேண்டும்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

மாற்றுத்திறனாளி முருகேசன் கூறுகையில், “2015ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கென்று அரசு இடம் கொடுத்தது. எங்களின் பொருளாதார பற்றாக்குறை காரணமாக வீடு கட்ட முடியவில்லை. ஆனால் எங்கள் இடத்தில் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் தலையீடு காரணமாக அவரவர்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளனர். இது சம்பந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தோம். இருப்பினும் நடவடிக்கை இல்லை. அரசியல் தலையீடும் உள்ளதால், யாரும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். ஆகவே அரசு தலையிட்டு எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும்” என்றார்.

மாற்றுத்திறனாளி மரியதாஸ் கூறுகையில், “2015ல் அரசு எங்களுக்கு நிலம் கொடுத்தது. அந்த இடம் நம் இடம்தானே. எங்கே போய் விடப்போகிறது என்று நினைத்திருந்தோம். ஆனால் எங்கள் இடத்தில் வேறு நபர்கள் வீடு கட்டியுள்ளனர். 1 வருடமாக இடத்தை மீட்க போராடி வருகின்றோம்” என்றார்.

இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுக்காக களத்தில் நின்று போராடி வரும் சமூக ஆர்வலர் மைக்கேல் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகளுக்கு 2.5 சென்ட் நிலம் 2015ஆம் ஆண்டு அரசு வழங்கியது. அதன் பின்பு அவர்கள் வேலி அமைத்து இடத்தை பாதுகாத்து வந்தனர். ஆனால் வேறு நபர்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் ஆக்கிரமித்து வைத்துள்ள நபர்களிடம் முறையிடும்போது அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை குறிப்பிட்டு மிரட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியரிடம் மனு அளித்தோம். அதற்கு அவர்கள் விசாரணை நடத்துவதாக கூறினர். ஆனால் விசாரணையில் இருக்கும்போதே வீடு கட்டி வருகின்றனர். போலீசாரும் கண்டு கொள்வதில்லை. ஆகவே அரசு நிலத்தை மீட்டெடுத்து கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும்” என்றார் அவர்.

இதையும் படிங்க: ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே..! 42 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு.. ஆனந்த கண்ணீர் சிந்திய முன்னாள் மாணவிகள்! - MAYILADUTHURAI ALUMNI MEET

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.