ETV Bharat / state

சென்னை மின்சார ரயில்கள் ரத்து எதிரொலி; தாம்பரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்! - Tambaram Gst Road traffic - TAMBARAM GST ROAD TRAFFIC

Cancellation of Beach Train made Tambaram Traffic: பீச் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதன் எதிரொலியாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு தாம்பரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 4:00 PM IST

சென்னை: சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ரயில் சேவை பாதிப்பாலும், பொதுமக்கள் தங்களின் பயணத்திற்குச் சொந்த வாகன பயன்பாட்டினை அதிகரித்திருப்பதாலும், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், குறிப்பாக கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் அணிவகுத்து நிற்கின்றன.

மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்திலும் பொதுமக்கள் பேருந்திற்காக காத்திருக்கின்றனர். இதனால் தாம்பரம் பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த, கூடுதல் பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வாணவேடிக்கையுடன் இணைக்கப்பட்ட பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுப்பகுதி.. அக்.1 முதல் சேவை தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.