தூத்துக்குடி: தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சியின் 153வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று (செப் 5) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை சுற்றிப்பார்க்க பொது மக்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பொதுமக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள், பள்ளி, கல்லுரி மாணவர்கள் ஏராளமானோர் வருகை தந்தனர். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் சுற்றிப்பார்க்க மக்கள் வந்தனர். அங்கு நின்ற பெரிய, பெரிய கப்பல்களை பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து கல்லுரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்கள் கூறுகையில், "வருடத்தில் ஒரு தடவை வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு துறைமுகத்தை பார்வையிட இலவசமாக அனுமதிக்கின்றனர். அப்போது இங்கு வருகை தந்து பிரமாண்டமான கப்பல்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், கப்பல்களில் இருந்து நிலக்கரி, ஆயில் இறக்குமதி, ஏற்றுமதி செய்கின்றனர். இதனை பார்த்து வியந்தோம். வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகத்திற்கு நன்றி என தெரிவித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : "உலகத்தரத்துக்கு உயர்த்தப்படும் தூத்துக்குடி துறைமுகம்! விரைவில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் என்னென்ன?" - Tuticorin VOC Port