தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பென்னாகரம் பகுதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் உள்ளிட்டோர் தங்கள் பகுதிக்கு டாஸ்மாக் அமைத்து தர வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மதுபானக் கடை வேண்டி நேற்று மனு.. இன்று மறுப்பு பேச்சு#Dharmapuri #women #liquorsale #tamil_nadu #TNGovt #போதைப்பொருள்விழிப்புணர்வு #ETVBharatTamil pic.twitter.com/LLAEw9vsWE
— ETV Bharat Tamil nadu (@ETVBharatTN) August 13, 2024
மேலும் இந்த மனு குறித்து கிராம மக்கள் அளித்த பேட்டியில், “தங்கள் பகுதியைச் சார்ந்த மதுப் பிரியர்கள், மதுபானக் கடை அருகில் இல்லாததால் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மதுபான கடைக்கு, சென்று வருவதால் நேரம் வீணாவதாகவும், அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை, என்றும் அருகிலேயே மதுக்கடை இருந்தால் அவர்களை தேடி கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்து விடுவோம்” என்றும் பேட்டி அளித்திருந்தார்.
அதேபோல், மதுப்பிரியர் பேசும்போது, “தங்கள் பகுதிக்கு மதுக்கடை வேண்டும், மதுக்கடை அமைத்தால் அருகில் உள்ள மதுக் கடைக்குச் சென்று மது அருந்திவிட்டு, தங்கள் கால்நடைகளை பராமரிக்க, நேரம் கூடுதலாக கிடைக்கும். மேலும் பதினைந்து கிலோ மீட்டர் பயணம் செய்து மது அருந்த செல்வதால் நேரம் வீணாவதாகவும், சில நேரங்களில் சந்து கடைகளில் வாங்கி குடிப்பதால், செலவு அதிகமாக வருகிறது” எனப் பேட்டியளித்து இருந்தார்.
இந்த பேட்டி வைரலான நிலையில், தற்போது அந்த மனு அளித்த மக்கள் அதற்கு மாற்றாக பேசும் மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர்கள் கூறுவதாவது, “ஆட்சியர் அலுவலகத்தில் ஏதோ மீட்டிங் எனவும், அதற்கு மனு கொடுக்க போறோம் எனவும் தெரிவித்து அழைத்துச் சென்றனர். ஆனால், திடீரென 300 ரூபாய் காசு கொடுத்து அங்கு எங்களை மாற்றி பேச வைத்தார்கள். எங்களுக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியாது. முதன்முறையாக மீட்டிங் என்றார்கள், அதனால் அவர்களை கூறியதைச் செய்தோம். அதற்கு அனைவரும் எங்களை திட்டுகிறார்கள். எங்கள் ஊருக்கு இப்போது எந்த மதுக்கடையும் வேண்டாம்” எனக் கூறும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 'இனி எங்களால் சரக்கு தேடி அலைய முடியாது'..சொந்த ஊரிலேயே டாஸ்மாக் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு!