ETV Bharat / state

சென்னையில் ஜன சேனா கட்சிக் கூட்டம்: சென்னை வாழ் ஆந்திர மக்களின் ஆதரவு கோரி கூட்டம்!

Jana sena party: ஆந்திர மாநிலத்தில் வருகின்ற மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி நிர்வாகிகள் இன்று (பிப்.25) செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சென்னையில் நடைபெற்ற ஜன சேனா கட்சிக் கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 25, 2024, 11:05 PM IST

சென்னையில் நடைபெற்ற ஜன சேனா கட்சிக் கூட்டம்

சென்னை: நாடு முழுவதும் இன்னும் ஒரு மாத காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் குறித்த பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, ஆந்திர மாநிலத்தில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இணைந்து இம்முறை களமிறங்குகின்றன. ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 24 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 நாடாளுமன்றத் தொகுதிகளில் 3 தொகுதிகள் ஜன சேனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று (பிப்.25) சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். நடைபெற உள்ள தேர்தலுக்காகச் சென்னையில் வசிக்கும் ஆந்திர மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த ஜன சேனா கட்சியின் கூட்டமானது நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் சத்யநாராயணா, சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் ஏ.ஏம்.ரத்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.எம் ரத்னம் கூறியதாவது, "ஜன சேனா கட்சியின் அலுவலகம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்காக ஜன சேனா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜன சேனா கட்சியின் ஆதரவுக்காக இங்கு வந்துள்ளனர். வரும் தேர்தலில் ஆந்திராவில் உள்ள சொந்தக்காரர்கள் ஜன சேனா கட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பவன் கல்யாண் தமிழகம் வந்தாலும் வரலாம். அங்குள்ள கட்சிக்கு உதவி செய்யவே இந்தக் கூட்டம் நடைபெற்றுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சிந்தப்பள்ளி பட்டாசு ஆலை விபத்து; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.