ETV Bharat / state

நீலகிரியில் அக்னி வீரர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு! - Agniveers Passing out parade

Agniveers Passing out parade in Nilgiri: குன்னூர் ராணுவப் பயிற்சி முகாமில் 841 அக்னி வீரர்கள் பயிற்சியை முடித்த நிலையில் அவர்களுக்கான பாசிங் அவுட் அணிவகுப்பு நடைபெற்றது.

அக்னி வீரர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு புகைப்படம்
அக்னி வீரர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு புகைப்படம் (Credit - ETVBharat TamilNadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 5, 2024, 4:36 PM IST

நீலகிரி: குன்னூர் நாட்டின் பழமை வாய்ந்த ராணுவப் பயிற்சி முகாம் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் குன்னூர் வெலிங்டன் பேரக்ஸ் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு நாட்டிற்கு பல கட்ட போர்களில் போராடிய பல்வேறு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.

அக்னி வீரர்களின் பாசிங் அவுட் அணிவகுப்பு (Credit - ETVBharat TamilNadu)

ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை இங்கு ஏராளமான ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் 31 வார காலங்கள் கடுமையான பயிற்சிகள் முடித்த பிறகு, வெலிங்டன் பேரக்ஸ் ஸ்ரீ நாகேஷ் பேரக்ஸில் 841 அக்னி வீரர்கள் தங்களுடைய முழு பயிற்சியையும் முடித்துவிட்டு அணி வகுப்பு மரியாதையைச் செய்தனர்.

மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் பிரகாரியார் சுனில் குமார் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அக்னி வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அக்னி வீரர்கள் அனைவரும் உப்பு சத்தியாகிரகம் எடுத்துக் கொண்டனர். பயிற்சியின்போது சிறந்த அக்னி வீரர்களுக்கான விருதுகளை சுனில் குமார் வழங்கினார்.

இதில் அனைத்து பிரிவுகளிலும் சிறந்த அக்னி வீரராக கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் நாயக் சிறந்த ஆட்சேர்ப்புக்கான விருதினை பெற்றார். இதில் 13 அக்னி வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ராணுவ உயர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், பயிற்சி முடித்த அக்னி வீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சேலத்தில் சசிகலா போஸ்டர்.. பரபரப்பில் அதிமுகவினர்! - Salem Sasikala Posters

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.