ETV Bharat / state

நீலகிரி கனமழையால் கார் மீது ராட்சத மரம் விழுந்து விபத்து! - NILGIRIS RAIN - NILGIRIS RAIN

Nilgiris rain accident: நீலகிரியில் பெய்த கனமழையின் காரணமாக, சுற்றுலா சென்ற கார் மீது ராட்சத மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்தவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த புகைப்படம்
குன்னூர் அருகே கார் மீது மரம் விழுந்த புகைப்படம் (credits - Etv Bharat Tamil nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 9:04 PM IST

நீலகிரி: கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாத வகையில் நடப்பு ஆண்டில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், வெளியில் செல்வதற்கே மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது வரலாறு காணாத வெயிலின் தாக்கம் அதிகரித்தது, சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு அதிகபட்சமாக 84.2 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியிருந்தது. வெயிலின் தாக்கத்தைப் போக்குவதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இப்பகுதிக்கு கூட்டமாகப் படையெடுத்து வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன் விளைவாக, இன்று (சனிக்கிழமை) குன்னூர், உதகை மற்றும் அருவங்காடு போன்ற பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதனால் குன்னூர் லேம்ஸ்ராக் (Lambsrock ), டால்பின் நோஸ் (Dolphin Nose) பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலையில் ராட்சத மரம் ஒன்று சுற்றுலா கார் மீது விழுந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த பயணிகள் உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து குன்னூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விழுந்த மரத்தை அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், இப்பகுதியில் பெய்துள்ள மழையால் தேயிலை மற்றும் மலைத்தோட்ட காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மழை மீண்டும் தொடரும் பட்சத்தில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. மேலும், தற்போது ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் கிடையாது.. அடுத்த சீசனில் நடக்கப்போவது என்ன? - Sabarimala Spot Booking

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.