திருப்பத்தூர்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 5:50 மணிக்கு மைசூர் நோக்கிச் சென்ற வந்தே பாரத் ரயில் வாணியம்பாடி அருகே சென்ற போது பயணியின் செல்போன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணைக்கு பிறகு ஜோலார்பேட்டை போலீசார் அளித்த தகவல், "சென்னை - மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில்(20607) C-11 பெட்டியில் பயணம் செய்த குஷ்நாத்கர்(வயது 31) என்ற பயணியின் செல்போன்(Realme) சார்ஜ்ரில் போட்டு இருந்த போது அதிக வெப்பம் காரணமாக வாணியம்பாடி அருகே காலை 08.04 மணிக்கு வெடித்தது.
இதனால் C-11 மற்றும் C-12 கழிவறைக்கு அருகே புகை வந்ததால் பயணிகள் அலறியுள்ளனர். இரண்டு பெட்டிகளின் பிரதான கதவுகளைத் திறந்து புகையை அகற்றிவிட்டு, 08.39 மணிக்கு 35 நிமிடங்கள் தாமதமாக ரயில் மீண்டும் புறப்பட்டது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை" என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆதார், பான் விஷயத்தில் உஷார்.. ஏழைகள் ஆவணங்களில் 44 ஏசி வாங்கி மோசடி.. ஆம்பூர் அதிர்ச்சி சம்பவம்!